fbpx

15,149 காலிப்பணியிடங்கள்..!! 2023-க்கான தேர்வு அட்டவணை..!! ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு..!!

2023 ஆம் ஆண்டிற்கான தேர்வு திட்ட அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

தமிழக அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், வட்டார கல்வி அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் பல்வேறு தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. இந்நிலையில், அடுத்தாண்டு நடத்தப்படவுள்ள தேர்வுகள் குறித்த திட்ட அட்டவணையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. மொத்தம் 15,149 காலிப்பணியிடங்களுக்காக நடத்தப்படும் 9 தேர்வுகள் குறித்த திட்ட அட்டவணை வெளியாகியுள்ளது.

15,149 காலிப்பணியிடங்கள்..!! 2023-க்கான தேர்வு அட்டவணை..!! ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு..!!

தேர்வு திட்ட அட்டவணை…

* அதன்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியருக்கான 4,000 காலிப் பணியிடங்களுக்கு, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்வு நடைபெற உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியாகும்.

* இடைநிலை ஆசிரியர்களுக்கான 6,553 காலிப் பணியிடங்களுக்கு, மே மாதம் தேர்வு நடைபெறும் என்றும், இதற்கான அறிவிப்பாணை மார்ச் மாதம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* பட்டதாரி ஆசிரியர்களுக்கான 3,587 காலிப் பணியிடங்களுக்கு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.

* ஆசிரியர் தகுதி தேர்வு (TET) தாள் 1 மற்றும் தாள் 2, 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம்
நடைபெறும் என்றும், இத்தேர்வு குறித்த அறிவிப்பு 2023 டிசம்பர் மாதம் வெளியாகும்.

Chella

Next Post

ரூ.3 லட்சம் வரை காப்பீடு தொகை..!! குழந்தைகளுக்கான சூப்பர் திட்டம்..!! கட்டாயம் இதை தெரிஞ்சிக்கோங்க..!!

Thu Dec 29 , 2022
இந்திய தபால் துறையானது, வங்கிகளுக்கு இணையாக பொதுமக்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதில், வங்கிகளை விட அதிகம் லாபம் தரும் வட்டியும் வழங்கப்படுகிறது. அதனால், தற்போது மக்கள் அஞ்சலக திட்டங்களில் சேமிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் உள்ள ஒவ்வொரு திட்டத்திற்கும் தனித்தனி விதிமுறைகளும் வட்டி விகிதங்கள் கால அளவும் இருக்கின்றது. இதன் மூலமாக சேமிப்புடன் சேர்த்து பாலிசிதாரருக்கு கூடுதல் வட்டித்தொகை […]
அஞ்சல் துறையில் வேலை..!! மாதம் ரூ.63,000 வரை சம்பாதிக்கலாம்..!! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..!!

You May Like