fbpx

கள்ளச்சாராயம் குடித்த 16பேர் உயிரிழப்பு!… 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!… பீகாரில் சோகம்!

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 16 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் கள்ள மதுபானத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், லக்ஷ்மிபூர், பஹர்பூர் மற்றும் ஹர்சித்தி போன்ற பல்வேறு கிராமங்களில் கள்ள சாராயம் குடித்த 16 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 48 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஆபத்தான நிலையில் இருப்பதால் இறப்பு எண்ணிக்கை மேலும் உயரும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, பாட்னாவில் இருந்து மதுவிலக்கு பிரிவின் சிறப்புக் குழு இந்த விஷயத்தை விசாரிக்க மோதிஹாரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த குழுவில் ஐந்து போலீஸ் அதிகாரிகள், இரண்டு டிஎஸ்பிகள் மற்றும் மூன்று இன்ஸ்பெக்டர்கள் உள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக பீகார் காவல்துறை தலைமையக அறிக்கை தெரிவித்துள்ளது. இது குறித்து மாவட்ட போலீசார் விசாரணை நடத்தி, சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டவர்களை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து கலால் துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருவதாக பீகார் காவல்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.

Kokila

Next Post

உடலுக்கு குளிர்ச்சி தரும் மந்தாரை!... மூலம், தைராய்டு நோய்களுக்கு சிறந்த தீர்வு!... மருத்துவ குணங்கள் இதோ!

Sun Apr 16 , 2023
மந்தாரை உள்ள வரை நொந்தாரைக் காண முடியாது’ என்று ஒரு மருத்துவப் பழமொழியே உண்டு. அந்த அளவுக்கு இதில் அடங்கியுள்ள மருத்துவகுணங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம். இது மணமுடைய இரண்டாகப் பிரிந்த இலைகளையும், பலநிற மலர்களையும் உடைய சிறுசெடி வகையாகும். இதில் செந்நிற மலருடைய பெரிதாய் வளரும் இனமும் காணப்படுகிறது. வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. இலை, பூ, வேர், பட்டை ஆகியன மருத்துவக் குணம் கொண்டவை. மந்தாரையானது திருக்கானப்பேர் (காளையார்கோயில்), […]

You May Like