வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சின்ன ராஜா குப்பம் என்ற பகுதியைச் சேர்ந்த விஷ்ணு பிரியா( 16) என்ற மாணவியின் தந்தையான கூலித் தொழிலாளி மது ஒதைக்கு அடிமையாகி அப்போது குடித்துவிட்டு வந்து வீட்டில் சண்டை இடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஆகவே தந்தையின் இது போன்ற அடாவடியான செயல்களை கண்டு வந்த அந்த சிறுமி மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்.
இதனால் சிறுமி விஷ்ணு பிரியா தன்னுடைய தந்தையை எப்படியாவது திருத்தி விடலாம் என்ற தன்னம்பிக்கையுடன், இனி குடிக்க வேண்டாம் என கெஞ்சிக்கேட்டிருக்கிறார் அந்த சிறுமி. ஆனால் மகளின் கண்ணீருக்கு கூட இல்லாமல் போய்விட்டது. தொடர்ந்து, அந்த சிறுமியின் தந்தை குடியும் கூத்துமாக இருந்துள்ளார்.
தந்தையின் குடிப்பதக்கம் காரணமாக. வீட்டில் நடைபெற்று வரும் பிரச்சனைகளை கவனித்து வந்த அந்த சிறுமி விஷ்ணுபிரியா இறுதியில் வேறு வழி தெரியாமல் தற்கொலை செய்து கொள்ளலாம். என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். ஆனால் குடும்பத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்ட அவர், உயிரிழப்பதற்கு முன்னர் ஒரு உருக்கமான கடிதத்தை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அந்த கடிதத்தில் தன்னுடைய தந்தை குடிப்பழக்கத்தை கைவிட வேண்டும் எனவும், குடும்பம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் எனவும், குடும்பம் எப்போது மகிழ்ச்சியாக இருக்கிறதோ அப்போதுதான் ஆத்மா சாந்தி அடையும் எனவும் எழுதியுள்ளார். இந்த கடிதத்தை எழுதி வைத்து சிறுமி விஷ்ணு பிரியா வீட்டில் யாருக்கும் தெரியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார். சிறுமி விஷ்ணு பிரியாவின் மரணம் அவரது குடும்பத்தினரை மட்டும்தான் ஒட்டுமொத்த கிராம மக்களையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.