நாட்டில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. பள்ளி, கல்லூரிகள், பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அந்த வகையில், தற்போது ஒரு சம்பவம் தூத்துக்குடியில் நடந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே சிறுமி ஒருவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட நபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். இது குறித்து போலீசார் கூறுகையில், “தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே தெற்கு மயிலோடை தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவருக்கு வயது 41.
கட்டடத் தொழிலாளியான இவர், 16 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமி நெல்லை அரசு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதற்கு காரணம் தர்மராஜ் தான்” என்பது சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தர்மராஜை கைது செய்துள்ளனர்.
Read More : கனமழை எதிரொலி..!! டெல்டா மாவட்டங்களில் பேருந்துகள் இயங்காதா..? தீயாய் பரவும் தகவல்..!! உண்மை என்ன..?