fbpx

160 ஆண்டுகள் பழமையான புடவையில் ஜொலித்த ஆலியா

மும்பையில் நடைபெற்ற ஆனந்த் அம்பானி திருமண நிகழ்ச்சியில் 160 ஆண்டுகள் பழமையான புடவையில் நடிகை ஆலியா பட் மின்னினார்.

தொழிலதிபர் முகேஷ் அம்பானி -நீடா அம்பானியின் இளைய மகன்ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சன்டுக்கும் நேற்று திருமணம்நடைபெற்றது. இன்று மற்றும்நாளை இரண்டு நாட்களுக்கு திருமண கொண்டாட்டங்கள் தொடர்ந்து நடைபெற உள்ளன.

இவர்களின் திருமணத்துக்கு முந்தைய வைபவங்களும், கொண்டாட்டங்களும் கடந்த சில மாதங்களாகவே நடந்து வந்தது. கடந்த மார்ச் மாதம் குஜராத் ஜாம்நகரில் நடந்த கொண்டாட்டத்தில் உலகம் முழுவதும் இருந்து பிரபலங்கள், தொழில் அதிபர்கள், ஹாலிவுட் திரை நட்சரத்திரங்கள் மற்றும் இந்தியாவின் அனைத்து முன்னணி திரை நட்சத்திரங்கள், அரசியல் பிரபலங்கள், தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல், நேற்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியிலும் திரை பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தது பேசுபொருளாகி உள்ளது.

அந்த வகையில், பாலிவுட் நடிகை ஆலியா பட், இந்திய ஆடை வடிவமைப்பாளரான மணீஷ் மல்ஹோத்ராவின் சேகரிப்பில் இருந்து 160 ஆண்டுகள் பழமையான நெய்த அஷாவலி புடவையை அணிந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்த்துள்ளது.

முன்னதாக, அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த மெட் காலா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆலியா பட், 163 கலைஞர்களால் வடிவமைக்கப்பட்ட சேலை அணிந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

read more…விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!! அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..!!

English Summary

160 years old saree weared aliya bhat in ananat ambani marriage function – she looks gorgeous

Next Post

விம்பிள்டன் 2024 | ஆடவர் இரட்டையர் பிரிவில் பிரிட்டனின் பேட்டன் மற்றும் ஹெலியோவாரா பட்டம் வென்றனர்..!!

Sun Jul 14 , 2024
Wimbledon 2024: Unseeded Patten and Heliovaara win men’s doubles crown

You May Like