fbpx

ஒரே கிராமத்தில் 17 வங்கிகள்! ரூ.5000 கோடி டெபாசிட் செய்துள்ள மக்கள்!… உலகின் பணக்கார கிராமம் இதுதான்!… இந்தியாவில் எங்கிருக்கிறது தெரியுமா?

உலகின் பணக்கார கிராமம் என்று அழைக்கப்படும் குஜராத் மாவட்டத்தில் உள்ள மதாபர் என்ற கிராமத்தை பற்றிய சில சுவாரஸியமான தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கிராமங்கள் என்றாலே ஏழ்மை நிலையில் இருக்கும் குடிசைகளும், வேட்டி, துண்டுடன் இருக்கும் மனிதர்களே நம் நினைவுக்கு வருவார்கள். அந்தவகையில் இந்தியா என்பது விவசாயத் தொழிலை அடிப்படையாக கொண்ட நாடு. வசதிகளும், வாய்ப்புகளும் நகரங்களில் தான் இருக்கும் என்பது பொதுவான எண்ணம். இந்த எண்ணத்தை புரட்டிப் போடுகிறது இந்தியாவின் ஒரு கிராமம். இந்த கிராமத்தில் உள்ள அத்தனை பேரும் பணக்காரர்களாக இருக்கின்றனர் என்றால் ஆச்சரியமாக இருக்கும். இதுபற்றிய சுவாரஸிய தகவல்களை பார்க்கலாம். கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் பலர் வெளிநாடுகளில் சென்று சம்பாதித்து பணத்தை சேமித்து வைப்பதன் மூலம், இன்று அந்த கிராமமே உலகின் நம்பர் ஒன் பணக்கார கிராமமாக மாறியுள்ளது.

குஜராத் மாநிலம் குட்ச் மாவட்டம் அருகே மதாபர் என்ற கிராமம் அமைந்துள்ளது. குட்ச் மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டம் ஆகும். அதிலும் வரலாற்று ரீதியாக, பல காலமாக கை வேலைப்பாடுகள், கட்டுமான பணிகள் செய்யும் மக்கள் அதிகம் மாவட்டமாக இது இருக்கிறது. குட்ச் மாவட்டத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் இவர்களை மேஸ்திரிஸ் ஆப் குட்ச் என்று அழைப்பார்கள். இந்த மேஸ்திரிஸ் ஆப் குட்ச் இப்போது ஒரு இனமாகவே மாறிவிட்டது. குட்ச் மாவட்டத்தில் இந்த மேஸ்திரி இனத்திற்கு என்று மொத்தம் 18 கிராமங்கள் உள்ளன.

இந்த 18 கிராம மக்கள் முழுக்க கட்டுமான பணியாளர்கள், மேஸ்திரிகள், தொழிலார்கள், சிவில் எஞ்சினியர்கள் அதிகம் காணப்படுகிறார்கள். குஜராத்திலும், அண்டை மாவட்டங்களிலும், வெளிநாடுகளிலும் கட்டுமான பணிகளை முன்னின்று நடத்துவது இந்த 18 கிராமங்களை சேர்ந்தவர்கள் தான். அதில் ஒரு கிராமம் தான் இந்த மதாபர் கிராமம். இந்த கிராமம் தான் உலகிலே பணக்கார கிராமமாக பார்க்கப்படுகிறது. வங்கியில் மக்கள் வைத்து இருக்கும் பண இருப்பு அடிப்படையில் இந்த கிராமத்தை பணக்கார கிராமம் என்று வரையறுக்கிறார்கள்.

இந்த கிராமத்தில் மட்டும் மொத்தம் 17 வங்கிகள் உள்ளது. முழுக்க முழுக்க பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் வசிக்கும் மதாபர் கிராமத்தில் மக்களின் முக்கிய தொழில் கட்டுமான துறை, டைல்ஸ் பதிப்பது போன்ற இன்டிரியர் வேலைகள்தான். இந்த கிராமத்தில், மொத்தம் 7600 குடும்பங்கள் வசிக்கின்றன. அதில் 447 பேருக்கு ஒரு வங்கி என மொத்தம் 17 வங்கிகள் இந்த கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த வங்கிகளில் மொத்தம் இந்த கிராம மக்கள் மட்டும் 5 ஆயிரம் கோடி ரூபாயை சேமித்து வைத்துள்ளனர்.

சராசரியாக ஒவ்வொரு குடும்பமும் 65 லட்சம் ரூபாய் வரை வங்கியில் சேமித்து வைத்து இருக்கிறார்கள். இந்த தொகை ஒரு சராசரியாகவே பார்க்கப்படுகிறது. ஒரு சில குடும்பங்களில் சேமிப்பு தொகை குறைவாகவும், ஒரு சில குடும்பங்களில் சேமிப்புத் தொகை ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமாகவும் உள்ளது. வங்கியில் இருக்கும் சேமிப்பின் அடிப்படையில் இந்த கிராமம் தான் உலகின் நம்பர் ஒன் கிராமம் என்று கூறப்படுகிறது. இந்த பணத்தை இவர்கள் உள்ளூர் கட்டுமான பணிகள் மூலம் மட்டே சம்பதிக்கவில்லை. இந்த கிராமத்தில் முந்தைய தலைமுறை மக்கள் எல்லோரும் உள்ளூர் கட்டுமான பணிகளை செய்த போதிலும், தற்போதைய தலைமுறை இளைஞர்கள் பலரும் வெளிநாடுகளில் கட்டுமான பணிகளை மேற்கொள்கிறார்கள்.

அமெரிக்கா, லண்டன், ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் கட்டுமான பணிகளை இந்த கிராமத்தில் இருப்பவர்கள் மேற்கொள்கிறார்கள். தற்போதைய தலைமுறை இளைஞர்கள் பலர் இந்த கிராமத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். இவர்களின் மிகப் பெரிய அனுபவங்கள் வெளிநாடுகளில் இருக்கும் கட்டுமான பணிக்கு தேவைப்படுவதால், இவர்களையே பல நாடுகள் கட்டுமான பணிகளுக்கு அழைக்கின்றனர். அப்படி, பல்வேறு கட்டுமான பணிகளில் பணியாற்றி தங்கள் கிராமத்திற்கு பணம் அனுப்புகிறார்கள். வெளிநாடுகளில் நன்றாக சம்பாதித்துவிட்டு, அதை தங்கள் கிராமத்து வங்கியிலேயே சேமித்துவிட்டு சில ஆண்டுகளுக்கு பின் திரும்பி ஊருக்கு வந்து கட்டுமான நிறுவனங்களை தொடங்கி நடத்தி வருகிறார்கள்.

கிட்டத்தட்ட 7600 வீடுகளில் எல்லா வீட்டிலும் ஒன்று அல்லது இரண்டு பேர் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர். வெளிநாட்டில் இருந்து வரும் டாலர்கள்தான் இவர்கள் வங்கிகளில் லட்சங்களில் பணம் சேர்க்க காரணம். குறிப்பாக பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் இந்த கிராம மக்கள் அதிக பணியாற்றுகின்றனர். இதனால் லண்டனில் மதாபர் கிராமத்திற்கு என்று தனியாக அசோசியேஷன் இருக்கிறது. அங்கே இருக்கும் மக்கள் எளிதாக ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ள இந்த அசோசியேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.

கட்டுமான துறை போக விவசாயத்திலும் இந்த கிராமம் நல்ல நிலையில் உள்ளது. தொடர்ந்து மூன்று போக விளைச்சலை மேற்கொண்டு வரும் இந்த கிராமம் மும்பை, டெல்லி போன்ற பெரு நகரங்களுக்கு கோதுமை, அரிசியை ஏற்றுமதி செய்து வருகிறது. பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள், ஏரிகள், பூங்காக்கள், அணைகள், கோவில்கள், மருத்துவமனைகள், ஏன் மாடுகளுக்கு என்று உலகத்தரம் வாய்ந்த பண்ணைகள் கூட அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

பரபரப்பு...! ஒடிசா விபத்து ஏற்பட்டதிற்கு இது தான் காரணம்...! ரயில்வே பாதுகாப்பு ஆணையம் தகவல்...!

Tue Jul 4 , 2023
ஒடிசா விபத்து ஏற்பட்டதிற்குத்‌ தவறான சிக்னல்‌ கொடுத்தது தான்‌ காரணம்‌ என ரயில்வே பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. ஒடிசா மாநிலம்‌ பாலசோரில்‌ சென்னை நோக்கி வந்த கோரமண்டல்‌ ரயில்‌ உட்பட அடுத்தடுத்து மூன்று ரயில்கள்‌ கடந்த மாதம் விபத்துக்கு உள்ளானது, இந்த கோர விபத்தில்‌ 300-க்கும்‌ மேற்பட்ட பயணிகள்‌ பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிபிஐ விசாரணையானது நடைபெற்று வருகிறது. […]

You May Like