fbpx

17 நாட்கள்..!! ரூ.1,000 கோடி வசூல்..!! சாதனைப் படைத்த ‘கல்கி 2898 ஏடி’..!! படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் உலக அளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘கல்கி 2898’. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம், பான் இந்தியா முறையில் ஜூன் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அறிவியல் – புராண கதை மிக்சிங்கில் உருவான இப்படம், அதன் அட்டகாசமான கிராஃபிக்ஸ் மற்றும் மேக்கிங் காட்சிகளில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.

இருப்பினும் திரைக்கதை சோர்வைத் தருவதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இந்த திரைப்படம் முதல் நாளில் உலக அளவில் ரூ.191 கோடியும், இரண்டாம் நாளில் மொத்தம் ரூ.295.5 கோடி வரை வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. இத்திரைப்படம் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது, ‘கல்கி 2898’ திரைப்படம் வெளியாகி 17 நாட்களில் ஆன நிலையில், உலக அளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால், பிரபாஸின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Read More : ’2026 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க கட்சிகள் தேடி வரணும்’..!! ’வேலையை ஆரம்பீங்க’..!! எடப்பாடி தடாலடி..!!

English Summary

After 17 days of its release, the film team has officially announced that ‘Kalki 2898’ has collected more than Rs 1,000 crore worldwide.

Chella

Next Post

'வருஷமெல்லாம் வசந்தம்' படத்தின் இயக்குனர் தூக்கிட்டு தற்கொலை..!! நடந்தது என்ன..? நண்பரின் பதிவால் அதிர்ச்சி..!!

Sat Jul 13 , 2024
Ravi Shankar, the writer of the song 'Rosapoo Chinna Rosoapoo' featured in the film Suriyavamsam and the director of the film 'Varushamellam Vasantham', has posted on his Facebook page that his friend has committed suicide.

You May Like