fbpx

17 முறை கத்தியால் குத்தி கொடுமை!… காரை ஏற்றியும் சாகாத மனைவி!… வாக்குமூலம் அளித்த பின் உயிரிழந்த பரிதாபம்!

அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியாவை சேர்ந்தவர், தனது மனைவியை 17 முறை கத்தியால் குத்தியும், காரை ஏற்றியும் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் புளோரிடாவில் இந்திய வம்சாவளியினரான, பிலிப் மேத்யூ – மெரின் ஜாய் என்ற இளம் தம்பதி வசித்து வந்தனர். 2020ல் தம்பதியர் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, 26 வயதாகும் மெரின் ஜாய் கணவரை பிரிந்து வாழ முடிவு செய்தார். அமெரிக்காவில் இது சாதாரணம் என்ற போதும் இதனால் கணவர் பிலிப் மேத்யூ கடும் ஆத்திரமடைந்தார். பிரிய விரும்பிய மனைவியை சமாதானப்படுத்த முயன்றார். அதே வேளையில் பிரச்சினையின்றி சேர்ந்து வாழ எந்த உத்திரவாதத்தையும் அவரால் கொடுக்க முடியவில்லை.

இதையடுத்து, சம்பவத்தன்று ஆத்திரத்துடன் மனைவி செவிலியராக பணிபுரியும் மருத்துவமனைக்கு சென்றார். அங்கே பணி முடித்து பார்க்கிங் ஏரியாவில் காரை எடுத்த மெரின் மீது தனது காரால் மோதினார். பின்னர் எடுத்துச் சென்ற கத்தியால் 17 முறை குத்தினார். அப்படியும் மெரின் உயிர் பிரியாத நிலையில், தரையில் உடலை சாய்த்து வேகத்தடை போன்று முன்னும் பின்னுமாக தனது காரை ஏற்றிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

அதன் பிறகும் சில மணி நேரங்கள் உயிரோடு இருந்த மெரின், தன் மீதான கொலைவெறித் தாக்குதல் நடத்திய கணவன் பிலிப் குறித்து மரண வாக்குமூலம் தந்த பின்னரே இறந்தார். சிசிடிவி மற்றும் நேரடி ஆதாரங்கள், கொலையின் தீவிரத்தை உணர்த்தவே, வழக்கை விசாரித்த புளோரிடா நீதிமன்றம் பிலிப் மேத்யூக்கு மரண தண்டனை அளித்தது. ஆனால், மனைவியுடன் பிலிப் மேத்யூ சுமூகமாக வாழ்ந்த தருணங்களை ஆதாரத்துடன் காண்பிக்கப்பட்டதால் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Kokila

Next Post

இனி இப்படி கூட தொலைந்த மொபைலை கண்டுபிடிக்கலாம்!… வாட்ஸ் அப்பில் இ-மெயில் வெரிபிகேஷன்!

Wed Nov 8 , 2023
இந்தியாவில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் உடனடி செய்தியிடல் பயன்பாடுகளில் வாட்ஸ்அப் செயலியும் ஒன்றாகும். கிட்டத்தட்ட ஒவ்வொரு இந்தியரும் இந்த மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ் அப் பயன்பாட்டில் அதிக நேரத்தைச் செலவிடுவதால், ஹேக்கர்கள் மற்றும் மோசடி செய்பவர்கள் மக்களை ஏமாற்ற அடிக்கடி புதிய தந்திரங்களைக் கொண்டு வருகிறார்கள். அந்தவகையில் பயனர்களின் பாதுகாப்புக்காக மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பில் புதிய பிரைவசி அம்சங்களைச் சேர்த்து வருகிறது. ஏற்கனவே வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் மெசேஜ்களை என்கிரிப்ட் […]

You May Like