சென்னையில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்து பெற்றோர் உதவியுடன் 17 வயது சிறுவன் கருக்கலைப்பு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திரு.வி.க நகர் பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர், பள்ளிக்கு செல்லாமல் அதே பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது, அந்த சிறுமிக்கு 17 வயது சிறுவன் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இருவருமே காதலித்து வந்துள்ளனர். மேலும், சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளான்.
இந்த காதல் விவகாரம் சிறுவனின் வீட்டிற்கு தெரியவந்ததால் சிறுமி அடிக்கடி அங்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், சிறுவனின் தாயாரிடம் அந்த சிறுமி தனக்கு வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். அடிக்கடி இவ்வாறு கூறிய நிலையில், சிறுமி கர்ப்பமாக இருப்பது சிறுவனின் தாயாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, கடந்த 7ஆம் தேதி சிறுவனின் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர் என 3 பேர் அந்த சிறுமியை ஒரு தனியார் மருத்துவ கிளினிக்கிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுமிக்கு கருக்கலைப்பு செய்துள்ளனர்.
இதையடுத்து, மறுநாள் அந்த சிறுமி வலியால் அழுது கொண்டே இருந்த நிலையில், இதுகுறித்து தாய் விசாரித்துள்ளார். அப்போது தான், நடந்த சம்பவம் அனைத்தையும் கூறியுள்ளார். இதைக்கேட்டு ஆடிப்போன தாய், கடந்த 29ஆம் தேதி காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், 17 வயது சிறுவன், அவனது தாய்-தந்தையை கைது செய்தனர். மேலும், சிறுவனின் குடும்ப உறுப்பினர் மற்றும் கருக்கலைப்பு செய்த மருத்துவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Read More : பொதுத்தேர்வு முடியும் வரை சென்னையில் ஐபிஎல் போட்டி கிடையாது..? சட்டப்பேரவையில் ஒலித்த குரல்..!!