Ayush Mathre: ஐபிஎல் தொடரில் நேற்று 38வது லீக் ஆட்டம் நடைபெற்றது. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை – மும்பை அனிகள் மோதின. தொடர்ச்சியாக 5 தோல்விகளை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது 8-வது ஆட்டம் ஆகும். இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்கஸ் அணி 20 ஓவர் முடிவில், 5 விக்கெட் வித்தியாசத்தில் 176 ரன்களை எடுத்தது.
இதில் அதிகபட்சமாக ஜடேஜா 53 ரன்கள், ஷிவம் துபே 50 ரன்கள், ஆயுஷ் மாத்ரே 32 ரன்களும் எடுத்தனர். மும்பையைச் சேர்ந்த ஆயுஷ் மாத்ரே, 15 பந்துகளில் இரண்டு சிக்சர்கள் மற்றும் நான்கு பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்தார். இதையடுத்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 15.4 ஓவரில் 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் சென்னை அணியின் 17 வயது இளம் வீரரான ஆயுஷ் மாத்ரே ஐபிஎல் தொடரில் அறிமுகமானார். இதன் மூலம் சென்னை அணியில் அறிமுகமான மிக இளம் வயது வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். 14 வயது வைபவ் சூர்யவன்ஷியை போலவே ஆயுஷ் மாத்ரேவும் தனது அறிமுக போட்டியில் அதிரடியாக ரன்களை குவித்து கவனம் ஈர்த்தார்.
ஆயுஷ் மத்ரேவின் துணிச்சலான ஆட்டத்தை டிரஸ்ஸிங் ரூமில் நின்றிருந்த சி.எஸ்.கே கேப்டன் எம்.எஸ். தோனி புன்னகையுடன் ரசித்து பார்த்தார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலானது. ஐபிஎல்லில் அவரது அற்புதமான அறிமுகத்திற்குப் பிறகு, அவரது ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த காணொளி அவருக்கு 6 வயதாக இருந்தபோது எடுக்கப்பட்டது. அவரது இந்த த்ரோபேக் வீடியோ சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
மும்பையில் பிறந்த இவர், இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் ரூ.30 லட்சத்திற்கு வாங்கப்பட்டார். முழங்கை காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகிய சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு பதில் இவர் களமிறக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.