fbpx

17 ஆயிரம் வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டுகளை முடக்கிய ஐசிஐசிஐ வங்கி… காரணம் என்ன தெரியுமா?

ICICI வங்கியின் மொபைல் பேங்கிங் அப்ளிகேஷனில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, 17,000 வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டுகளை ICICI வங்கி Block செய்துள்ளது. வாடிக்கையாளர்களின் தகவல்களை பாதுகாப்பதில் ஏற்பட்ட இந்த குளறுபடி, மொபைல் பேங்கிங் அப்ளிகேஷனின் நம்பகத்தன்மை பற்றியும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ, நாட்டின் மொத்த கிரெடிட் கார்டு வர்த்தகத்தில், மூன்றாவது பெரிய நிறுவனமாகவும் திகழ்கிறது. கடந்த மார்ச் மாத நிலவரப்படி, இந்தியாவில் பயன்படுத்தப்படும் கிரெடிட் கார்டுகளில் 16.6% ஐசிஐசிஐ வங்கியால் நிர்வகிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழ்நிலையில் தான், டெக்னோஃபினோ (TechnoFino) நிறுவனர் சுமந்த் மண்டல் என்பவர் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், ஐசிஐசிஐ வங்கி iMobile Pay செயலியில் வாடிக்கையாளர்கள் தங்களின் கணக்குக்கு பதிலாக வேறு வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு விவரங்களைப் பார்க்க முடிவதாக தெரிவித்தார். மேலும், ஐசிஐசிஐ வங்கி மற்றும் ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆகியவற்றை டேக் செய்து, இந்த பிரச்சனையை விரைவாக சரி செய்ய வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், ஐசிஐசிஐ “iMobile Pay செயலியில், பிற வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு நம்பர், காலாவதி தேதி மற்றும் CVV எண் ஆகியவை தெளிவாகக் காட்டப்படுவதாகவும், இதனால், பிறருடைய கிரெடிட் கார்டு தகவல்களைத் மற்றொருவர் தவறாகப் பயன்படுத்த இது வழிவகுக்கும் என்றும் சுமந்த மண்டல் குறிப்பிட்டிருந்தார். ஏற்கெனவே பல ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு பயனாளர்கள் இதுதொடர்பாக புகார்களை எழுப்பி இருந்தனர். எனினும், டெக்னோஃபினோ நிறுவனர் சுமந்த், எக்ஸ் தளத்தில் இப்பிரச்னையை எழுப்பியதால், விஸ்வரூபம் எடுத்தது. அதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் தராதிருந்த ஐசிஐசிஐ வங்கி, உடனடியாக செயல்பட்டதுடன், புதிதாக பயன்பாட்டிற்கு வழங்கிய 17 ஆயிரம் கிரெடிட் கார்டுகளை பிளாக் செய்தது.

அடடே..!! இனி இவ்வளவு ஈசியா ரயில் டிக்கெட் புக் பண்ணலாமா..? பயணிகளே நோட் பண்ணிக்கோங்க..!!

shyamala

Next Post

விருது விழாவில் அவமானத்தை சந்தித்த பிரபலம்! இரவும் முழுவதும் நினைத்து தூங்காத பாலிவுட் நடிகை

Sun Apr 28 , 2024
நடிகை வித்யாபாலனுக்கு விருது வழங்கியபோது ஏற்பட்ட அவமானத்தை நினைத்து தூங்கவில்லை என தெரிவித்துள்ளார். பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் வித்யாபாலன், தமிழிலில் அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார். மறைந்த சில்க் சுமிதா வாழ்க்கை கதையான தி டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். இந்த நிலையில், சினிமாவில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை நம்முடன் அவர் பகிர்ந்துள்ளார். தான் ஒரு விருது வழங்கும் விழாவில் […]

You May Like