fbpx

விமானத்தில் 18+ மட்டும் தனி இடம்!… பிரத்யேகமான பகுதியில் என்னென்ன சிறப்பம்சங்கள் தெரியுமா?

கோரெண்டன் ஏர்லைன்ஸ் (Corendon Airlines) நிறுவனம் குழந்தைகள் இல்லாத சூழலை விரும்பும் 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பயணிகள் பயணிக்கும் வகையில் பிரத்யேகமான இடம் வழங்க திட்டமிட்டுள்ளது.

குடும்பத்துடன் பயணிக்காத நபர்களுக்கு விமானங்களில் குழந்தைகளின் சத்தம் இடையூறு ஏற்படாமல் இருக்க, சில வழித்தடங்களில் “வயது வந்தவர்களுக்கு மட்டும்” பிரத்யேகமான பகுதியை கோரெண்டன் ஏர்லைன்ஸ் வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், அந்த விமான நிறுவனம் பயன்படுத்தும் ஏர்பஸ் ஏ350 விமானங்களில் சில இருக்கைகள் தனியாக ஒதுக்கப்படும். வரும் நவம்பர் மாதம் ஆம்ஸ்டர்டாம் மற்றும் டச்சு கரீபியன் தீவான குராக்கோ இடையே இயக்கப்படும் விமானத்தில் இந்த வசதி தொடங்கப்படும் எனக் கூறப்படுகிறது. துருக்கி, நெதர்லாந்து இடையே விமான சேவையை வழங்கிவரும் கோரெண்டன் ஏர்லைன்ஸ் வழங்கிவருகிறது.

இந்த வசதி குழந்தைகளுடன் பயணிக்கும் பெற்றோருக்கும் சாதகமானதாக இருக்கும் என்றும் அந்த நிறுவனம் சொல்கிறது. பெற்றோர் தங்கள் குழந்தை அழும்போதோ அல்லது ஏதேனும் சேட்டைகள் செய்யும்போதோ சக பயணிகளிடமிருந்து ஏற்படக்கூடிய எதிர்வினைகளைப் பற்றி அதிகம் கவலைப்படாமல் அவர்கள் பயணிக்கலாம் என்று கூறுகிறது. இந்த சிறப்புப் பகுதி விமானத்தின் மற்ற பகுதிகளிலிருந்து தடுப்புச் சுவர்கள் மற்றும் திரைச்சீலைகள் மூலம் தனியாகப் பிரிக்கப்படும். “அமைதியான மற்றும் நிதானமான விமானப் பயணத்திற்கு வழிவகுக்கும் சூழல் உருவாக்கப்படும்” என்று கோரெண்டன் நிறுவனம் தெரிவிக்கிறது.

வயது வந்தவர்களுக்கான பகுதி விமானத்தின் முன் பகுதியில் உருவாக்கப்படும். கூடுதலாக ஒன்பது பெரிய இருக்கைகள், லெக்ரூம் மற்றும் 93 வழக்கமான இருக்கைகள் ஆகியவை இருக்கும் என்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த இருக்கைகளுக்கு கூடுதலாக 45 யூரோ (49 டாலர் அல்லது 4,050 ரூபாய்) கொடுக்க வேண்டும். இதேபோல பெரிய இருக்கைகளுக்கு கூடுதலாக 100 யூரோ (108 டாலர் அல்லது 8,926 ரூபாய்) செலவாகும்.

Kokila

Next Post

முன்னாள் படைவீரர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க தனியார் துறையுடன் ஒப்பந்தம்...!

Fri Sep 1 , 2023
பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் படைவீரர் நலத் துறையின் கீழ் உள்ள மறுவாழ்வு இயக்குநரகம் (டி.ஜி.ஆர்) மற்றும் மெஸர்ஸ் ஜென்பாக்ட் இந்தியா தனியார் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே டெல்லியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மறுவாழ்வு இயக்குநரகம் மற்றும் பெரு நிறுவனங்களுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம், பாதுகாப்பு சேவைகளின் மதிப்பிற்குரிய முன்னாள் படைவீரர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க பெருநிறுவனங்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களை ஒரே தளத்தில் கொண்டு வர முயற்சிக்கிறது. தொழில்முறை சேவைகளில் […]

You May Like