குஜராத் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து அடுத்தடுத்து 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இதனால், அங்கு சட்டவிரோத மது விற்பனை, கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வருகிறது. அவ்வப்போது இதுபோன்ற கள்ளச்சாராய விற்பனையும் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், அகமதாபாத் மாவட்டம் மற்றும் போட்டட் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. இதனை அருந்திய பலரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்தனர். இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளச்சாராயம் குடித்ததில் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இச்சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பூரண மதுவிலக்கு நடைமுறை சிக்கல்கள் கொண்டது. அதனாலேயே இதுபோன்ற கள்ளச்சாராய மரணங்கள் நிகழ்கின்றன என்று எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன.