fbpx

18 தமிழக மீனவர்கள் கைது!…மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 18 தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழக மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதில் உங்கள் உறுதியான உறுதிப்பாட்டிற்காக, தமிழக பாஜக மற்றும் தமிழக மீனவர்கள் சார்பாக எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். பாம்பன் பகுதியைச் சேர்ந்த 18 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டதையும், இந்த மீனவர்களின் 2 மீன்பிடி படகுகளும் கைது செய்யப்பட்டதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

இந்த விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தலையிட்டு, கைதான 18 தமிழக மீனவர்களை விரைவாக தாயகம் திரும்பவும், அவர்களின் மீன்பிடி படகுளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Kokila

Next Post

அமுக்குவான் பேயா.! தூங்கும் போது யாரோ அமுக்குவது போல் உணர்வு ஏற்படுகிறதா.. உண்மை என்ன தெரியுமா.!?

Wed Jan 17 , 2024
நம்மில் பலருக்கும் தூங்கும் போது யாரோ நம் மேல் விழுந்து அமுக்குவது போல் தோன்றும். அந்த நேரத்தில் கை, கால்களை அசைக்க முடியாமல் எதுவும் பேச முடியாமல் போகும். இதற்கு காரணம் அமுக்குவான் பேய்தான் என்று பலரும் கருதி வருகின்றனர். ஆனால் அது உண்மை இல்லை. இதற்கு ஆய்வாளர்கள் கூறிய உண்மையான காரணம் என்ன என்பதை குறித்து பார்க்கலாம் தூங்கும் போது இப்படி நிகழ்வது ‘தூக்க பக்கவாதம்’ என்று மருத்துவர்கள் […]

You May Like