fbpx

ஒரே நாளில் ரூ.180 கோடி வருவாய்..!! சாதனை படைத்த பதிவுத்துறை..!! இன்னைக்கு என்ன நடக்கப்போகுது தெரியுமா..?

தமிழ்நாட்டில் கூடுதல் டோக்கன் வழங்கப்பட்டதால், ஒரே நாளில் ரூ.180 கோடி வருவாய் ஈட்டி பதிவுத்துறை சாதனை படைத்திருக்கிறது. இதையடுத்து, இன்றும் கூடுதல் டோக்கன்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அடுத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில், “அதிகளவு பத்திரப்பதிவுகள் நடக்கும் சுபமுகூர்த்த தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, பத்திரப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நேற்று முன்தினம் அக்.18ஆம் தேதி ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்பட்டன.

அதன் விளைவாக நேற்று ஒரே நாளில் ரூ.180 கோடி வருவாய் ஈட்டி பதிவுத்துறை சாதனை படைத்துள்ளது. சுபமுகூர்த்த தினமாக கருதப்படும் ஐப்பசி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான இன்றும் (அக்.20) அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால், அக். 20ஆம் தேதி கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் தர பதிவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதில் 150 டோக்கன்களும், இரண்டு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதில் 300 டோக்கன்களும், அதிகளவில் பத்திரப்பதிவு நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 150 சாதாரண முன்பதிவு டோக்கன்கள் மற்றும் ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் டோக்கன்களுடன் கூடுதலாக 4 டோக்கன் என 16 டோக்கன்கள் மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

சிவகாசி பட்டாசு வெடி விபத்து..!! 6 கடைகளுக்கு அதிரடி சீல்வைப்பு..!!

Fri Oct 20 , 2023
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற இரு வேறு பட்டாசு வெடிவிபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, தீபாவளி பண்டிகை இன்னும் சில நாட்களில் வர உள்ள நிலையில், சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் திறக்கப்பட்டு விற்பனைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், தொடர் விபத்துக்கள் நடைபெறுவதால், விபத்துக்கள் நடைபெறாமல் இருப்பதற்காக ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் வருவாய் […]

You May Like