fbpx

மகிழ்ச்சி…! 17,18,19 ஆகிய தேதிகளில் 1,875 சிறப்புப் பேருந்து இயக்கப்படும்…! போக்குவரத்து துறை அறிவிப்பு…!

வாரயிறுதி நாட்களில் பயணிகள் சிரமமின்றி பயணிக்க வசதியாக, அரசுப் போக்குவரத்துக் கழகம் தினசரி சேவைகளுடன் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 1,875 சிறப்புப் பேருந்துகளை இயக்க உள்ளது.

போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் வெள்ளிக்கிழமை 555 சிறப்புப் பேருந்துகளும், சனிக்கிழமை 645 பேருந்துகளும், திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம் ஆகிய இடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை 280 பேருந்துகளும் இயக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேட்டில் இருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூருக்கு வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தலா 65 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். பெங்களூரு, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு ஆகிய இடங்களில் இருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிட ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

கோடையில் தொல்லை தரும் எறும்புகள்!! விரட்டியடிக்க சூப்பர் டிப்ஸ் இதோ!!

Thu May 16 , 2024
வெயில் காலம் வந்தாலே எறும்புகளின் படையெடுப்பு தொடங்கிவிடும். அவை மளிகைப் பொருள், திண்டபண்டங்கள் என புகுந்து ஒரு கை பார்த்துவிட்டுதான் வெளியேறும். இந்த எறும்புகள் மிகப்பெரிய தொல்லையாக மாறிவிடுகின்றன. வீடுகளில் காணப்படும் சிற்றெறும்புகளும், சாமி எறும்பு என்றழைக்கப்படும் கருப்பு எறும்புகளும் பொதுவாக மனிதர்களுக்கு ஆபத்தற்றவையாக இருந்தாலும், உணவுப் பொருட்களுக்கும் குழந்தைகளுக்கும் சேதம் ஏற்படுத்தக்கூடியவை. எனவே முடிந்த வரை எறும்புகளை வீடுகளுக்குள் வரவிடாமல் தடுக்க வேண்டியது அவசியமாகிறது. எறும்பு விரட்டியாக செயல்படும் […]

You May Like