fbpx

ஒரே மாதத்தில் தொழிலாளர் அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ் 19.88 லட்சம் பேர் புதிதாக பதிவு…! மத்திய அரசு தகவல்…!

தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தின் கீழ் 2023 ஜூலை மாதத்தில் 19.88 லட்சம் புதிய தொழிலாளர்கள், பதிவு செய்துள்ளனர்.

2023 ஜூலை மாதத்தில் 19.88 லட்சம் புதிய ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் (இ.எஸ்.ஐ.சி) தற்காலிக சம்பளப் பட்டியல் தரவு தெரிவிக்கிறது. 2023 ஜூலை மாதத்தில் சுமார் 27,870 புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு தொழிலாளர் அரசு காப்பீட்டு திட்டம் சமூக பாதுகாப்பு அமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

ஜூலை மாதத்தில் சேர்க்கப்பட்ட மொத்த 19.88 லட்சம் ஊழியர்களில், 25 வயதிற்குட்பட்ட 9.54 லட்சம் ஊழியர்கள் புதிய பதிவுகளில் பெரும்பான்மையாக உள்ளனர். இது மொத்த ஊழியர்களில் 47.9% ஆகும். ஊதிய தரவுகளின் பாலின வாரியான பகுப்பாய்வு, 2023 ஜூலையில் பெண் உறுப்பினர்களின் நிகர சேர்க்கை 3.82 லட்சமாக இருப்பதைக் குறிக்கிறது.

2023 ஜூலை மாதத்தில் மொத்தம் 52 திருநங்கைகள் இ.எஸ்.ஐ திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளதாக தரவு காட்டுகிறது. சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் அதன் நன்மைகளை வழங்க தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் உறுதிபூண்டுள்ளது என்பதை இது காட்டுகிறது.

Vignesh

Next Post

பிக்சட் டெபாசிட்டில் அதிக வட்டி கிடைக்க வேண்டுமா..? இந்த தேதிக்குள் இணைந்திருங்கள்..!!

Thu Sep 21 , 2023
மக்கள் பலர் தங்களின் எதிர்காலத்தில் நிதி நெருக்கடி இல்லாமல் இருப்பதற்காக பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டு வருகின்றனர். பல வங்கிகள் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வட்டி வீதத்தை அதிகமாக வழங்கி வருகிறது. அந்த வகையில், ஐடிபிஐ வங்கியில் பிக்சட் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு அதிகமான வட்டி கிடைக்கிறது. அதாவது 375 நாட்கள் மற்றும் 444 நாட்களுக்கான பிக்சட் டெபாசிட் தொகை வழங்க அம்ரீத் என்ற சிறப்பு திட்டத்தை […]

You May Like