தமிழ்நாட்டில் நகராட்சி, மாநகராட்சிகளில் காலியாகவுள்ள 1,933 காலிப்பணியிடங்களுக்கு பிப்.9ஆம் தேதி முதல் மார்ச் 12ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்தில் காலியாகவுள்ள 1,933 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள தமிழ்நாடு அரசு, ”இந்த பணிக்கு விண்ணப்பிப்போர், வரும் பிப்.9ஆம் தேதி முதல் மார்ச் 12ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் https://tnmaws.ucanapply.com என்ற வலைதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர் பணிக்கான இடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை கல்வித் தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விரிவான தகவலுக்கு விண்ணப்பதாரர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விளக்கமான அறிவிப்பு மற்றும் தேர்வாளர்களுக்கான வழிமுறைகளை பார்த்து தெரிந்து கொள்ளவும்.