1999ஆம் ஆண்டு பாகிஸ்தான் படைகளின் ஊடுருவுதலை எச்சரித்து கார்கில் போருக்கு வித்திட்ட ‘லடாக் ஷெப்பர்ட்’ டஷி நம்க்யால் காலமானார். அவருக்கு வயது 58.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் இந்திய ஆர்மி வெளியிட்டுள்ள பதிவில், ”லடாக்கின் துணிச்சலான இதயம், தேசபக்தர் பிரிந்துவிட்டார்” என தெரிவித்துள்ளது. மேலும், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை இந்திய ஆர்மி தெரிவித்துள்ளது. இவர், 1999ஆம் ஆண்டு தன்னுடைய காணாமல் மாடுகளை தேடிக் கொண்டிருந்தபோது பாகிஸ்தான் படை வருவதை கண்டு இந்திய ஆர்மிக்கு எச்சரிக்கை செய்தார்.
1999 ஆம் ஆண்டு மே மாத தொடக்கத்தில் பதான் உடையில் பாகிஸ்தான் வீரர்கள் படலிக் மலைத்தொடரில் பதுங்கு குழி தோண்டுவதை டஷி நாம்க்யால் பார்த்துள்ளார். இதன் தீவிரத்தை உணர்ந்த அவர், உடனே இந்திய ராணுவத்திற்கு தகவல் தெரிவித்தார்.