சர்வதேச சந்தையில் நிலவிவரும் கச்சா எண்ணையின் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட அவற்றின் அடிப்படையில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றனர்.
ஏற்கனவே சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் குறைக்கப்பட்ட நிலையில், வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாடு சிலிண்டர் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. சென்ற மாதம் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை 2021.50க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் தான் இந்த மாதம் வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை அதிரடியாக குறைந்து இருக்கிறது. இன்றைய நிலவரப்படி, ரூ.84.50 விலை குறைந்து 1937 ரூபாயாக சிலிண்டரின் விலை இருக்கிறது இதன் காரணமாக வணிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.