fbpx

மே 1ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும்..!! யாரும் மிஸ் பண்ணிடாதீங்க..!! அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டங்களை நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

குடியரசு தினம், சுதந்திர தினம், தொழிலாளர் தினம், காந்தி ஜெயந்தி, உள்ளாட்சி தினம், உலக தண்ணீர் தினம் உள்ளிட்ட முக்கிய தினங்களில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. இந்நிலையில், மே 1ஆம் தேதி தொழிலாளர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு வரும் மே 1ஆம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்குத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையைப் பின்பற்றி காலை 11 மணிக்கு கூட்டம் நடத்த வேண்டும் எனவும் கூட்டம் நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ள இடம், நேரம் ஆகியவை முன்கூட்டியே மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Chella

Next Post

மே 5ஆம் தேதி தமிழ்நாட்டில் விடுமுறை..!! எந்த மாவட்டத்தில் தெரியுமா..? ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..!!

Tue Apr 25 , 2023
மே 5 ஆம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதாக ஆட்சியர் அனிஸ் சேகர் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் கள்ளழகர் திருக்கோவிலுடைய சித்திரைத் திருவிழா வரும் 30ஆம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வாக 4ஆம் தேதி மதுரை மூன்று மாவடி, தல்லாகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கள்ளழகர் எதிர்சேவை நடைபெறும். இதனைத் தொடர்ந்து 5ஆம் தேதி காலை 5.45 மணி முதல் 6.12 […]
மே 5ஆம் தேதி தமிழ்நாட்டில் விடுமுறை..!! எந்த மாவட்டத்தில் தெரியுமா..? ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..!!

You May Like