fbpx

கணவரின் 2-வது திருமணம் செல்லாது என அறிவிக்க முதல் மனைவி உரிமைக் கோரலாம்..!! உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

கணவரின் இரண்டாவது திருமணம் செல்லாது என அறிவிக்க முதல் மனைவி உரிமைக்கோரலாம் அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்து திருமணச் சட்டம் 1955 பிரிவு 11ன் கீழ் கணவரின் 2-வது திருமணத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி முதல் மனைவி தாக்கல் செய்த விண்ணப்பம் பராமரிக்கத்தக்கது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முதல் மனைவி தனது கணவரின் இரண்டாவது திருமணத்தை எதிர்த்து குடும்ப நீதிமன்றம் வழங்கிய உத்தரவை எதிர்த்து கரிமா சிங் தாக்கல் செய்த மனுவை நீதிபதி சௌமித்ரா தயாள் சிங் மற்றும் நீதிபதி வினோத் திவாகர் ஆகியோர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்தது.

வழக்கின் விவரம்: பிரதிமா சிங் ராகவேந்திர சிங்கை மணந்தார். ஆனால், இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக ராகவேந்திர சிங் குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பிரதிமா தனது கணவருடன் வாழ விரும்புவதாக வேண்டி, திருமண சடங்குகளை திரும்பப் பெறுவதற்கு எதிர் உரிமை கோரினார். இதனால், விவாகரத்து மனு நிராகரிக்கப்பட்டது. மேலும் பிரதிமா தாக்கல் செய்த பதில் மனு, பிரதிமாவை அவரது வீட்டிற்கு அழைத்து வருமாறு ராகவேந்திர சிங்குக்கு உத்தரவு வழங்கப்பட்டது.

இதற்கிடையே, தனது கணவர் வேறொருவரை திருமணம் செய்து கொண்டது பிரதிமா சிங்கிற்கு தெரியவந்தது. இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது, ராகவேந்திர சிங் இறந்துவிட்டார். இந்த வழக்கில் இரண்டாவது மனைவியும் பிரதிவாதி ஆக்கப்பட்டார். தனது கணவரின் இரண்டாவது திருமணம் செல்லாது என அறிவிக்க முதல் மனைவி வழக்குப் பதிவு செய்ய முடியாது என இரண்டாவது மனைவி ஆட்சேபனை தெரிவித்தார்.

தனது கணவரின் இரண்டாவது திருமணம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி வழக்குத் தொடரலாம் என்று முதல் மனைவிக்கு ஆதரவாக குடும்ப நீதிமன்றம் தீர்மானித்தது. இதனால் மனமுடைந்த இரண்டாவது மனைவி, இந்த உத்தரவை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உயர்நீதிமன்றம் குடும்ப நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து, இரண்டாவது மனைவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Chella

Next Post

வெடித்தது கலவரம்..!! 144 தடை உத்தரவு..!! இணைய சேவைகளும் துண்டிப்பு..!! பெரும் பரபரப்பு..!!

Wed Aug 2 , 2023
ஹரியானா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு மனோகர் லால் கட்டார் முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் அருகே உள்ள மேவாட் என்ற இடத்தில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் நேற்று முன்தினம் ஊர்வலம் நடத்தினர். அப்போது, இரு தரப்பினரிடையே வன்முறை வெடித்து பின்னர் கலவரமாக மாறியது. இதையடுத்து, குழந்தைகள் உள்பட சுமார் 2,500 பேர் கோயிலில் தஞ்சமடைந்துள்ளனர். சாலையில் நிறுத்தப்பட்டிருந்த […]

You May Like