fbpx

தினமும் 2.5 ஜிபி டேட்டா.. 90 நாட்கள் வேலிடிட்டி.. ஜியோவின் புதிய ரீசார்ஜ் திட்டங்கள்..

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளருக்கு போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து வருகின்றன.. அந்த வகையில் ஜியோ நிறுவனம் தொடர்ந்து பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது.. இந்நிலையில் தற்போது 2 புதிய ரீசார்ஜ் திட்டங்களை ஜியோ அறிமுகம் செய்துள்ளது..

ரூ. 349 ப்ரீபெய்ட் திட்டம்.. ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 349 ப்ரீபெய்ட் திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு தினசரி 2.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவை கிடைக்கும்.. மேலும் JioCinema, JioTV, JioSecurity மற்றும் JioCloud பயன்பாடுகளுக்கான சந்தாக்களையும் அந்நிறுவனம் வழங்குகிறது. இந்த திட்டம் 30 நாட்கள் செல்லுபடியாகும்.

ரூ 899 ப்ரீபெய்ட் திட்டம்.. ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டமானது தினசரி 2.5ஜிபி டேட்டாவையும், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகளையும் வழங்குகிறது. மேலும் JioCinema, JioTV, JioSecurity மற்றும் JioCloud ஆகிய பயன்பாடுகளின் சந்தாக்களும் அடங்கும். இந்த திட்டம் 90 நாட்கள் செல்லுபடியாகும்.. ₹349 அல்லது ₹899 திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் பயனர்களும் ஜியோவின் 5G வெல்கம் ஆஃபருக்குத் தகுதி பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

இந்த இரண்டு திட்டங்களும் தினசரி 2.5ஜிபி டேட்டாவை வழங்குகின்றன.. பொதுவாக 2.5 ஜிபி தினசரி டேட்டா திட்டங்கள் இந்தியாவில் அதிகமாக கிடைப்பதில்லை.. சற்று கூடுதல் விலை செலுத்த வேண்டிய நிலை உள்ளது.. இந்த நிலையில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் இந்த புதிய திட்டங்களை ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.. முன்னதாக கடந்த டிசம்பரில் ஜியோ ரூ.2023க்கு மற்றொரு 2.5ஜிபி தினசரி டேட்டா திட்டத்தை அறிமுகப்படுத்தியது.. இந்த திட்டம் 252 நாட்கள் சேவை செல்லுபடியாகும்.. இதில் வாடிக்கையாளர்களுக்கு, வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கிறது.

Maha

Next Post

டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி வழக்கு….! அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!

Wed Jan 25 , 2023
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இங்கிலாந்து நாட்டில் உள்ள பார்க்லே வங்கியில் 1,04,93,000 அமெரிக்க டாலரை முறையீடாக முதலீடு செய்திருக்கிறார் என்று புகார் எழுந்தது இது குறித்து அவர் மீது அமலாகத் துறை வழக்குப் பதிவு செய்தது. இதுகுறித்து டிடிவி தினகரன் மீது மேலும் 7 வழக்குகள் தொடரப்பட்டனர். இதனை அடுத்து அன்னிய செலாவணி மோசடி வழக்கு குறித்த ஆவணங்களை தனக்கு வழங்க வேண்டும் என்று […]

You May Like