fbpx

இந்திய ரயில்வேயில் 2.74 லட்சம் காலியிடங்கள்..!! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஆர்டிஐ..!!

ஜூன் 2023 நிலவரப்படி இந்திய ரயில்வேயில் 2.74 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒடிசா ரயில் விபத்துக்கு பிறகு மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலரான சந்திர சேகர் கெளா் என்பவர் ரயில்வேயில் தற்போதைய காலிப் பணியிடம் குறித்து ஆர்டிஐ மூலம் கேள்வி எழுப்பியிருந்தாா். இதற்கு ரயில்வே அமைச்சகம் அளித்துள்ள பதிலில், ”கடந்த ஜூன் 1ஆம் தேதி நிலவரப்படி, ரயில்வேயில் 2,74,580 குரூப்-சி பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் 1,77,924 பணியிடங்கள் பாதுகாப்புப் பிரிவில் காலியாக உள்ளன” என்று தெரிவித்துள்ளது.

2022 டிசம்பரில் ரயில்வேயில் 3.12 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஆனால், இப்போது 2.74 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த ஆண்டு அக்டோபருக்குள் 1.52 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப ரயில்வே இலக்கு நிா்ணயித்துள்ளது. அவற்றில் 1.38 லட்சம் பணியிடங்களுக்கான நியமன கடிதங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. அதில் 90,000 போ பணியில் சோந்துள்ளனா்” என்று தெரிவித்துள்ளனா்.

Chella

Next Post

பிரதமர் தொடங்கி வைத்த சூப்பர் சேமிப்பு திட்டம்..!! உடனே இணைந்திருங்கள்..!! ரூ.11 லட்சம் கிடைக்கும்..!!

Thu Jun 29 , 2023
பிரதமர் மோடி தொடங்கி வைத்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 11,16,815 ரூபாய் வரை சேமிக்க வழி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதி பிரதமர் மோடியால் செல்வமகள் சேமிப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. பெண்கள் உயர் கல்வி, திருமணம், மருத்துவ தேவைகளுக்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு சேமிப்பு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதில், ஒரு […]

You May Like