fbpx

கோயிலுக்கு சென்ற 2 குழந்தைகள் நரபலி..? சாலையோரம் கிடந்த உடல்கள்..!! அதிர்ச்சி தகவல்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள தியோபந்த் பகுதியில் 2 குழந்தைகள் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். மாந்திரீக சடங்கில் தங்கள் குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

தியோபந்த் மாவட்டத்தில் உள்ள பயல் கிராமத்தைச் சேர்ந்த தேவ் (11) மற்றும் அவரது 9 வயது உறவினர் மஹி ஆகியோர் தங்கள் கிராமத்திற்கு வெளியே உள்ள கோவிலுக்கு சென்றுள்ளனர். இரவு வெகு நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால், குடும்பத்தினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவில் சாலையோரத்தில் 2 குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதையடுத்து, கிராம மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார், தடயவியல் குழுவுடன் சம்பவ இடத்திற்கு வந்து, விபத்து நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், இருவரது உடல்களிலும் எலும்பு முறிந்ததற்கான அறிகுறிகளை கண்டனர். அவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், மாந்திரீக சடங்கின் ஒரு பகுதியாக குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறி, குடும்பங்களும் கிராம மக்களும் தியோபந்த்-நானோடா சாலையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனவே, இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என காவல்துறை அதிகாரிகள் கிராம மக்களிடம் உறுதி அளித்துள்ளனர்.

Read More : பெற்றோர்களின் கவனக்குறைவால் பலாத்காரம் செய்யப்பட்ட 3 வயது குழந்தை..!! கொலை செய்து உடலையும் எரித்ததால் அதிர்ச்சி..!!

English Summary

Police were informed about the suspicious death of 2 children in Deoband area of ​​Saharanpur district.

Chella

Next Post

சஷ்டி விரதம் கடைபிடிக்கும் வழிமுறைகள்..!! என்னென்ன சாப்பிடலாம்..? எப்படி விரதம் இருப்பது..?

Sat Nov 2 , 2024
It is better for every fasting person to observe fast according to their health condition.

You May Like