ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் தாகூர் காவ் பகுதியைச் சேர்ந்தவர் விஜேந்திரா ராம். இவர் 10 ஆண்டுகளுக்கு முன் மம்தா தேவி என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஆர்யன் குமார் மற்றும் யஷ் ராஜ் என்ற இரு குழந்தைகள் இருந்தனர். இதற்கிடையே கணவன் – மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், மனைவிக்கு அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு நபருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக கணவர் விஜேந்திரா சந்தேகம் அடைந்தார். இதனால், அவர் மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார். இருப்பினும், கள்ளக்காதலை கைவிட மறுத்ததால், விஜேந்திரா ராம் தனது குடும்பத்தாருடன் சேர்ந்து மனைவி மம்தாவை தீர்த்து கட்ட சதி திட்டமும் தீட்டியுள்ளார்.
அதன்படி, வீட்டில் வைத்தே தனது மனைவியை கொலை செய்துள்ளார் விஜேந்திரா. இதற்கிடையே, தனது அம்மாவை கொலை செய்ததை குழந்தைகள் இருவரும் நேரில் பார்த்து அழத் தொடங்கியுள்ளனர். நாம் மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தில் தனது இரு மகன்களையும் கொலை செய்த விஜேந்திரா, மூவரின் உடலையும் காட்டுப் பகுதிக்குள் எடுத்துச் சென்று தீவைத்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் உண்மை அம்பலமானது. குற்ற சம்பவத்தின் முக்கிய நபரான விஜேந்திரா, அவரது தந்தை, தாய் மற்றும் சகோதரி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.