திருச்சியிலிருந்து 5.40 மணிக்கு ஷார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக 2 மணி நேரமாக வானத்தில் வட்டமிட்டு வந்தது விமானம். இந்த விமானம் திருச்சி விமான நிலையத்திலிருந்து மாலை 5.40 மணிக்கு புறப்பட்டு, இரவு 8.30 மணியளவில் ஷார்ஜா விமான நிலையத்தை அடைந்துவிடும், ஆனால் தற்போது கோளாறு காரணமாக 2 மணி நேரமாக வானில் வட்டமிட்டது. விமானத்தில் எரிபொருளை குறைக்கும் முயற்சியாக விமானம் வானில் வட்டமடித்து வந்ததாக கூறப்பட்டது. விமானத்தில் இருக்கும் 144 பயணிகளின் பாதுகாப்பு கருதியும், விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கும் விமானிகள் முயற்சித்தனர்.
விமான தரையிறங்கும் நேரத்தில் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் விமான நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டன. மேலும் விமான நிலையத்தில் தீயணைப்புத் துறை வீரர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தயார் நிலையில் இருந்தனர். விமானம் சரியாக இரவு 8.15 மணிக்கு தரையிறக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விமானம் பத்திரமாக தரையிறக்கப்படும் எனவும் பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என விமான நிலைய அதிகாரிகள் கூறினர். மேலும் இந்த விமானத்தை உலகம் முழுவது பல லட்சம் மக்கள் டிராக் செய்து பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. 144 பயணிகளுடான் 2 மணி நேரமாக வானில் வட்டமிடுத்து கொண்டிருந்த விமானம் தரையிறங்கியுள்ளது. மேலும் தரையிறங்கும் போது விமானத்தில் இருந்து புகை வந்தது. மேலும் விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் கூறுகையில், ஒரு மணி நேரம் முன்பு தான் விமானத்தில் கோளாறு ஏற்ப்பட்டுள்ளது என்பது செய்தியின் வாயிலாக தெரிந்தது என்று கூறியுள்ளார். மேலும் விமானிகள் கோளாறு குறித்து எந்த அறிவிப்பும் பயணிகளுக்கு சொல்லவில்லை என்றும் கூறியுள்ளார்.