அதிவிரைவு ரயில்கள் புறப்படுவதற்கு 2 மணி நேரம் தாமதமானால் பயணிகள் அனைவருக்கும் இலவச உணவு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே, பயணிகளுக்கான சேவைகளை மேம்படுத்துவதற்கு பல முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. மேலும் இயற்கை மற்றும் தொழில்நுட்ப காரணங்களால் ரயில்களை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டாலும், அதிலிருந்து தவிர்க்க சில வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ராஜஸ்தானி, சதாப்தி, துரந்தோ உள்ளிட்ட அதிவிரைவு ரயில் புறப்படுவதற்கு எந்த காரணத்துக்காகவும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் தாமதமானால் அங்குள்ள பயணிகளுக்கு உணவு இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்பது ரயில்வே விதிமுறையில் உள்ளது.

அதன்படி பயணிகள் தங்களுக்கு வேண்டுமான உணவை கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம். அசைவம், சைவம், சிற்றுண்டி, சாப்பாடு என அனைத்தையும் பயணிகள் தேர்வு செய்து கொள்ளலாம் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. இது ரயில் பயணிகள் இடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.