fbpx

ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு..!! வந்தாச்சு புதிய உத்தரவு..!! மாணவர்களே ரெடியா..?

அடுத்த கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ, பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு இரண்டு பொதுத்தேர்வுகள் நடத்துவதற்கான செயல்முறையை தொடங்கும்படி மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், கல்வி அமைச்சகமானது, அடுத்த கல்வியாண்டு முதல் ஆண்டுக்கு இரண்டு பொதுத்தேர்வுகளை நடத்துவதற்கு சிபிஎஸ்இ தயாராகும்படி அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 2025-26ஆம் கல்வியாண்டு முதல் ஆண்டுக்கு இரண்டு பொதுத்தேர்வுகளை எவ்வாறு நடத்துவது என்பதற்கான செயல்முறைகளை உருவாக்கும்படி மத்திய இடைநிலை கல்வி வாரியத்திடம் அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இது தொடர்பாக அடுத்த மாதம் சிபிஎஸ்இ மற்றும் ஒன்றிய கல்வி அமைச்சகம் பள்ளி முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், செமஸ்டர் திட்டத்தை அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More : Breaking | 6, 7, 8ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்..!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!!

Chella

Next Post

திடீரென பூமிக்குள் புதைந்த 30 வீடுகள்..!! சாலைகள் கடும் சேதம்..!! அச்சத்தில் ஜம்மு காஷ்மீர்..!!

Sat Apr 27 , 2024
ராம்பன் பகுதியில் திடீரென நிலப்பகுதி மூழ்கியதில் 31 வீடுகள் வரை சேதமடைந்து விட்டன. பயிர்களும் சேதமடைந்து விட்டன. ஜம்மு காஷ்மீரில் ராம்பன் பகுதியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் பெர்நோட் என்ற கிராமத்தில் நேற்று மாலை 5 மணியளவில் திடீரென நிலப்பகுதி மூழ்க தொடங்கியுள்ளது. இதனால், சாலைகள் சேதமடைந்தன. 30 முதல் 40 வீடுகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. சாலைகளில் அடுத்தடுத்து விரிசல்கள் காணப்பட்டன. இந்த விரிசலானது தொடர்ந்து கொண்டிருந்தது […]

You May Like