fbpx

பிளஸ் 2 துணைத் தேர்வு விடைத்தாள் நகல் இன்று வெளியீடு!… கட்டணம் எவ்வளவு தெரியுமா?…

தமிழகத்தில் பிளஸ் 2 துணைத் தேர்வு விடைத்தாள் நகல் இன்றுமுதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 துணைத் தேர்வு விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் அதனை இன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு மறு கூட்டம் அல்லது மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆகஸ்ட் 10 காலை 11 மணி முதல் ஆகஸ்ட் 12 மாலை ஐந்து மணிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்திலும் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திலும் ஒப்படைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மறுமதிப்பீட்டு பாடம் ஒவ்வொன்றுக்கும் கட்டணமாக 505 ரூபாயும், மறு கூட்டல் இரண்டுக்கு உயிரியல் பாடத்திற்கு 305 ரூபாய் மற்றும் ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் 205 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

Kokila

Next Post

கோல்ட் அவுட் இருமல் சிரப்!… உயிரைக் கொல்லும் அளவிற்கு ஆபத்தானவை!… உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

Wed Aug 9 , 2023
இந்திய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தான ’கோல்ட் அவுட்’ (Cold Out)சிரப் உயிரைக் கொல்லும் அளவிற்கு ஆபத்தானவை என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. `கோல்ட் அவுட்’ என்று முத்திரை பதிக்கப்பட்ட சிரப், தமிழ்நாட்டைச் சார்ந்த ஃபோர்ட்ஸ் லேபரட்டரீஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த டாபிலைஃப் பார்மா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. இந்த சிரப்பின் மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மாதிரியில், ஏற்றுக்கொள்ள […]

You May Like