உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு வித்தியாசமான சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள தியோரியா என்ற பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவரது வீடியோ ஒன்று தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அவர் அலங்காரம் செய்து மணப்பெண் கோலத்தில் காட்சியளிக்கிறார். இந்த பெண் தன்னுடைய கழுத்தில் இரண்டு தாலிகள் அணிந்துள்ளார். இரு ஆண்கள் மீதும் கை போட்டு போஸ் கொடுத்துள்ளார்.
அந்த இரண்டு ஆண்களும், பெண்ணின் கணவர்களாம். அதுமட்டுமின்றி, அவர்கள் இருவருமே சகோதரர்கள் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். 2 கணவர்களுடன் அந்த பெண் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இது பற்றி அந்தப்பெண் கூறுகையில், ”இது என்னுடைய 2 தாலிகள். என்னுடைய 2 கணவர்களுக்காகவும் இந்த தாலிகளை அணிந்துள்ளேன்.
வீடியோவை காண : https://www.instagram.com/reel/DDvYmMAiNF1/?utm_source=ig_embed&ig_rid=bde650df-58c2-4026-bc26-41b950cdc285
நாங்கள் 3 பேரும் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறோம். வெளியில் எங்கு சென்றாலும் மூவருமே ஒன்றாகத்தான் செல்வோம். அதேபோல், ஒன்றாக சாப்பிட்டு, ஒன்றாகவே தூங்குவோம். என்னுடைய 2 கணவர்களுடனும் நேரத்தை திறம்பட நிர்வகிக்கிறேன். எங்களுக்குள் அன்பாகவும், ஒற்றுமையாகவும் இருக்கிறோம்” என்று அந்தப் பெண் கூறியிருக்கிறார்.