fbpx

அவதூறு வழக்கில் வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனை.. ராகுல்காந்தி நாளை மேல்முறையீடு..

அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ராகுல்காந்தி நாளை மேல்முறையீடு செய்ய உள்ளார்..

2019ம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ராகுல்காந்தி, நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என அனைவரும் எப்படி மோடி என்ற பொதுவான பெயரை வைத்துள்ளனர் என்று கூறியிருந்தார்.. இதையடுத்து மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசியதாக ராகுல்காந்தி மீது குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.. கடந்த 4 ஆண்டுகளாக இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம் ராகுல்காந்தி குற்றவாளி என்று சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது..

மேலும் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கியும் உத்தரவிட்டது. இதையடுத்து ராகுல்காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்..  எனினும் 2 ஆண்டு சிறைத்தண்டனை 30 நாட்களுக்கு ஒத்திவைப்பதாகவும், அதற்கு முன் ராகுல் காந்தி இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. மேலும் காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.. இந்நிலையில் சூரத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து குஜராத் நீதிமன்றத்தில் நாளை ராகுல்காந்தி மேல்முறையீடு செய்கிறார்.. இதற்காக ராகுல்காந்தி நாளை சூரத் செல்கிறார்.. ராகுல்காந்திக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை உறுதி செய்யப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பது இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் தான் தெரியவரும்..

Maha

Next Post

வெயிலுக்கு ஓய்வு கொடுத்த வெதர் ரிப்போர்ட்….! காத்திருக்கும் கனமழை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!

Sun Apr 2 , 2023
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து இருக்கின்ற வானிலை இன்று முதல் 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நீலகிரி போன்ற மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் […]
தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை..!! எங்கெங்கு தெரியுமா..? வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

You May Like