ஆப்கானிஸ்தானின் காபூலில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 20 பேர் பலியாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள தலிபான் தலைமையிலான வெளியுறவு அமைச்சகத்தின் கட்டிடத்தின் முன் நேற்று பிற்பகல் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக டோலோ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. “காபூலில் வெளியுறவு அமைச்சகத்தின் முன் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. தாக்குதலில் 20 க்கும் மேற்பட்டோர் இறந்ததாகக் கூறப்படுகிறது.
காபூல் பாதுகாப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் காலித் சத்ரான் தனது ட்வீட்டில், வெளியுறவு அமைச்சகத்தின் அருகே நடந்த குண்டுவெடிப்பு உயிரிழப்புகளை ஏற்படுத்தியதை உறுதிப்படுத்தினார். பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.