fbpx

குடிகார கணவனுக்கு 20 தூக்க மாத்திரை..!! துண்டு துண்டாக வெட்டி உடலை புதரில் வீசிய 5-வது மனைவி..!!

மத்தியப்பிரதேச மாநிலம் சிங்ராலி மாவட்டத்தில் பிறப்புறுப்புகள் வெட்டப்பட்ட நிலையில், ஆண் சடலம் ஒன்றை காவல்துறையினர் கண்டெடுத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். இதில், உயிரிழந்தது பிரேந்தர் குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். ஆனால், போலீசாருக்கு எந்தவிதமான துப்பும் கிடைக்கவில்லை. இதனால், பிரேந்தர் குர்ஜார் மனைவி காஞ்சன் குர்ஜாரின் நடவடிக்கை போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. பிறகு அவரை கண்காணித்தபோது அவர்தான் தனது கணவனைக் கொலை செய்துள்ளார் என்பது உறுதியானது. பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரேந்தர் குர்ஜாருக்கு ஏற்கனவே 4 திருமணங்கள் நடந்துள்ளது. இவருக்குக் குடிப்பழக்கம் இருப்பதால் அவர்கள் அனைவரும் இவரை விட்டுப் பிரிந்து சென்றுள்ளனர். இதையடுத்து, பிரேந்தர் குர்ஜார் 5-வதாக காஞ்சன் குர்ஜாரை திருமணம் செய்துள்ளார். தினமும் குடித்துவிட்டு மனைவியைச் சித்ரவதை செய்து வந்துள்ளார். இதனால், கணவனைக் கொலை செய்ய மனைவி திட்டம் போட்டுள்ளார். அதன்படி, பிப்ரவரி 21ஆம் தேதி பாலில் 20 தூக்க மாத்திரைகளைக் கலந்து கணவனுக்குக் கொடுத்துள்ளார். இதைக் குடித்து விட்டு பிரேந்தர் குர்ஜார் மயக்கம் அடைந்துள்ளார். பிறகு அவரை கோடாரியால் கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் அவரது பிறப்பு உறுப்பையும் அறுத்து எரிந்து, உடலைக் கிராமத்திற்கு வெளியே உள்ள புதரில் வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

இறந்த தாய்...... சடலத்துடன் 2 நாட்கள் தனியாக தங்கிய 11 வயது மகன்!

Fri Mar 3 , 2023
பெங்களூர் யஸ்வந்த்புரம் பகுதியில் தாய் இறந்தது தெரியாமல் 11 வயது சிறுவன் இரண்டு நாட்கள் அவருடனே வாழ்ந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. பெங்களூர் யஷ்வந்த்புரம் பகுதியைச் சார்ந்தவர் அண்ணம்மாள் வயது 45. இவருக்கு 11 வயதில் சூர்யா என்ற மகன் உள்ளான். கடந்த வருடம் இவரது கணவர் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் அன்னம்மாள் கூலி வேலை செய்து தனது மகனை வளர்த்து வந்திருக்கிறார். அவருக்கு […]

You May Like