Cricketer Josh Baker: இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர் ஜோஷ் பேக்கர் தனது 20 வயதில் மரணமடைந்ததாக வொர்செஸ்டர்ஷைர் கிரிக்கெட் கிளப் அறிவித்துள்ளது. மரணத்திற்கான காரணத்தை கிளப் குறிப்பிடவில்லை.
இங்கிலாந்து Worcestershire-ன் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஜோஷ் பேக்கர், கடந்த 2021 இல் தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். மேலும் இந்த சீசனில் இரண்டு கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டிகளில் மட்டுமே விளையாடினார், கடைசியாக ஏப்ரல் மாதம் கிடர்மின்ஸ்டரில் டர்ஹாமுக்கு எதிராக விளையாடினார். ஒட்டுமொத்தமாக, பேக்கர் அனைத்து வடிவங்களிலும் 47 ஆட்டங்களில் விளையாடி 70 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வொர்செஸ்டர்ஷையரின் இரண்டாவது XI அணிக்காக 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரு நாளுக்குப் பிறகு, அவர் மரணமடைந்த செய்தி கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவரது மரணத்திற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், கவுண்டி கிளப்புகள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். 20 வயதுடைய ஜோஷ் பேக்கரின் அகால மரணத்தை அறிவிப்பதில் வொர்செஸ்டர்ஷைர் கவுண்டி கிரிக்கெட் கிளப் மனம் உடைந்துவிட்டது” என்று கவுண்டி கிளப் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
17 வயதில் வொர்செஸ்டர்ஷையரில் இணைந்த ஜோஷ் பேக்கர், ஏற்கனவே விளையாட்டில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தினார், 22 முதல் தர போட்டிகளில் 43 விக்கெட்டுகளையும், 25 வெள்ளை பந்து தோற்றங்களில் 27 விக்கெட்டுகளையும் குவித்துள்ளார். ஜோஷ் பேக்கர் தனது கடைசி முதல்தர ஆட்டத்தை ஏப்ரல் மாதத்தில் டர்ஹாமுக்கு எதிராக வொர்செஸ்டருக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: 40,000 மாணவர்கள் தேர்வுக்கே வராமல் ஆப்சென்ட்..!! ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு..!!