பாகுபலி திரைப்படத்தில் பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ள நடிகை மீது 200 கோடி ரூபாய் மோசடி புகார் ஒன்றில் போலீஸ் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகுபலி திரைப்படத்தில் ’உருக்கியோ’ என்ற பாட்டுக்கு நடனமாடி புகழ் பெற்றவர் நோரா பத்தேகி . கர்நாடகாவின் பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் பத்துக்கும் மேற்பட்ட குற்றவழக்குகளில் தொடர்புடையதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு டெல்லியில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீதும் பணம் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் இந்த வழக்கில் நடிகை நோராவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து டெல்லி பொருளாதார குற்றப்பிரிவினர் சம்மன் அனுப்பினர் . டெல்லியில் உள்ள அலுவலகத்தில் நடிகை நோரா தனது வழக்கறிஞருடன் செப்டம்பர் 2ம் தேதி காலை 11 மணி அளவில் வந்துள்ளார். 9 மணி நேரத்திற்கும் மேலாக நடிகை நோராவிடம் 50க்கும் மேற்பட்ட கேள்விகளை போலீஸ் அதிகாரிகள் துருவி துருவி கேட்டுள்ளனர். சுகேஷிடம் என்னென்ன பரிசுப் பொருட்ங்கள் வாங்கியுள்ளீர்கள் என்பது உள்பட பல கேள்விகள் கேட்கபபட்டதாக தெரிகின்றது. விசாரணையை அடுத்து மீண்டும் இதே வழக்கில் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என கூறி போலீசார் அனுப்பி வைத்தனர்.
நடிகை நோரா பத்தேகி சமீபத்தில் துபாயில் இருந்து திரும்பினார். அவர் சுகேஷ் சந்திரசேகரிடம் என்ன பரிசுகள் வாங்கினார். யாரெல்லாம் அவரை பார்த்தார்கள் , இந்த குறிப்பிட்ட சில நாட்களில் தொலைபேசியில் யாருடன் எல்லாம் பேசி உள்ளார்கள் என்பது உள்பட பல கேள்விகள் கேட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மேலும் இதே வழககில் நடிகை ஜேக்குலின் பெர்னான்டஸ் என்பவருக்கு என்னென்ன பரிசுகளை சுகேஷ் அளித்துள்ளார் எனவும் கேள்விகள் கேட்டுள்ளனர். அதற்கு தனக்கு இது பற்றி தெரியாது என்று அவர் கூறியதாகவும் இந்த வழக்கு விசாரணையில் நோரா , அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளித்துள்ளார் என அதிகாரிகள் கூறி உள்ளனர்.
மேலும், இந்த விசாரணையில் நோரா , சுகேஷின் மனைவி ’நெயில் ஆர்ட் ’ தொடர்பான கலை விழா பற்றி பேசியதாகவும் அடிக்கடி அவர் இது பற்றி பேச தன்னை தொடர்பு கொண்டதாகதெரிவித்துள்ளார். அதற்காக பி.எம்.டபள்யு கார் பரிசளித்ததாகவும் அவரது குற்றப்பின்னணி குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்பது போன்ற தகவலை அவர் விசாரணையில் குறிப்பிட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவரது பதில்கள் பண மோசடி வழக்கு 2002ன் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளது.