உத்திரபிரதேச மாநிலத்தில் 200 போலி ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்த சம்பவம் அரங்கேறி உள்ளது. உள்ளூர் நிர்வாகம் நடத்தி வைத்த திருமணங்களில் தான் இந்த மெகா மோசடியில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலியாக மணப்பெண், மணமகனாக நடித்தவர்களுக்கு ரூ.500 முதல் ரூ.2000 வரை பணம் கொடுத்தது அம்பலமாகி உள்ளது.
உத்தரபிரதேசத்தின் பாலியா பகுதியில் இந்து திருமணங்கள் தொடர்பான மோசடி ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது, அங்கு சுமார் 200 பெண்கள் பணத்திற்காக மணமகன் இல்லாமல் திருமணம் செய்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது. அந்தச் சம்பவம் ஜனவரி 25ஆம் தேதி நடந்ததாகவும், மணப்பெண்கள் போல் நடித்த பெண்கள் தங்கள் வருங்கால கணவர்கள் இல்லாமல் தனியாக திருமணச் சடங்குகளைச் செய்தது தெரியவந்தது.
முதலமைச்சர் திருமணத் திட்டத்தின் கீழ் அரசுப் பணத்தைப் பெறுவதற்காக உள்ளூர் நிர்வாகம் இந்த நிகழ்வை போலியாக நடத்தியதாக நம்பப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஏழைப் பெண்ணுக்கும் திருமணத்தின் போது அரசு ரூ.51,000 வழங்குகிறது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பெண்களைக் கூட்டி, பணத்திற்காக மணப்பெண்களாக நிற்க வைத்துள்ளனர். தனியாக திருமணம் செய்து வைக்கும் பெண்களுக்கு, போலி திருமணம் செய்து வைப்பதால், அவர்களுக்கு பணத்தில் பாதி பங்கு கிடைக்கும் என்பதால் இதனை செய்துள்ளனர். இந்த மெகா மோசடியில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.