fbpx

ஐபிஎல் வரலாற்றில் 200+!… ஒரே போட்டியில் அடுத்தடுத்த சாதனைகளை நிகழ்த்திய தோனி!… தல தான் No.1!

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் எய்டன் மார்க்ரம் அடித்த பந்தை கேட்ச் பிடித்ததன் மூலம் அதிக கேட்ச்கள் பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்த தோனி, நம்பர் ஒன் இடத்தையும் பெற்றுள்ளார்.

ஐபிஎல் 16வது சீசன் வெகு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. சீசன் தொடங்கியது முதலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இதனை வழிநடத்தும் தலைவரான தோனியை பற்றிதான் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டுவருகிறது. ஏனென்றால் ஒவ்வொரு போட்டியிலும் சாதனைகளை நிகழ்த்திவருகிறது. இதுமட்டுமின்றி தோனிக்கு என தனி ரசிகர் பட்டாளம் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நகரம் தொடங்கி கிராமம் வரை உள்ளது. இப்படியான பேரன்பிற்குரிய ரசிகர் பட்டாளத்தினைக் கொண்டுள்ள தோனியின் கடைசி போட்டி எதுவாக இருக்கும் என்ற கேள்வி அவர்களது ரசிகர்களிடத்திலும் உள்ளது. இயல்பாகவே இவருக்காக மைதானத்திற்கு வந்து போட்டியைப் பார்ப்பவர்கள் ஏராளம்.

மேலும், தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் சீசன்தான் தோனியின் கடைசி சீசனாக இருக்கும் என செய்திகள் ஆரம்பத்தில் இருந்து பரவி வருவதால், சென்னை அணியின் போட்டிகள் நடக்கும் மைதானத்தில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இப்படி குவியும் ரசிகர்கள் தோனி களமிறங்கும் போது ஆரவாரமாக கூச்சலிடுகின்றனர். இதனால், மைதானத்தில் அவருக்கு தனி வரவேற்பே கிடைக்கிறது. இந்தநிலையில், சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 29வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.

இதில், டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் வரிசையாக விக்கெட்டுகளை இழந்து வெறும் 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், தீக்‌ஷனா வீசிய 12.5 ஆவது ஓவரில் ஹைதராபாத் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் அடித்த பந்து அவரது பேட்டில் பட்டு விக்கெட் கீப்பர் தோனியின் கைக்கு சென்றது. இந்த போட்டியில் ஒரு கேட்ச் பிடித்ததன் மூலமாக 208 கேட்ச்கள் பிடித்து டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக கேட்ச் பிடித்த விக்கெட் கீப்பர் என்ற பட்டியலில் தோனி முதலிடத்தை பிடித்துள்ளார்.

இதேபோல், 2ஆவது இடத்தில் குயிண்டன் டி காக் (207 கேட்ச்), தினேஷ் கார்த்திக் (205 கேட்ச்), கம்ரான் அக்மல் (172 கேட்ச்), தினேஷ் ராம்தின் (150) என்று அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர். இதனை தொடர்ந்து மாயங்க் அகர்வாலை தோனி ஸ்டெம்பிங்க் செய்துள்ளார். ஸ்டெம்பிற்கு பின்னால் நிற்பது தோனி என்று தெரிந்தும் கூட எப்படி அவரால் இறங்கி வர முடிந்தது என்று தெரியவில்லை. அதுவும் பாதி தூரத்திற்கு வந்துவிட்டார். அப்புறம் என்ன, பந்து தோனி கைக்கு செல்லவே எளிதாக ஸ்டெம்பிங் செய்துள்ளார். கடசியாக வாஷிங்டன் சுந்தரை ரன் அவுட் செய்துள்ளார். இதன் மூலமாக ஒரே போட்டியில் ஒரு கேட்ச், ஒரு ரன் அவுட், ஒரு ஸ்டெம்பிங் என்று மூன்றையும் செய்து தோனி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

எனது சாதனையை முறியடித்தால் வருத்தப்படுவேன்!... சச்சினின் பதிலும்!... விராட் கோலியின் அன்பும்!

Sun Apr 23 , 2023
100 சதங்கள் சாதனை எனது 24 வருட கடின உழைப்பு; எனவே இந்த சாதனையை விராட் கோலி முறியடித்தால் வருதப்படுவேன் என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுகர் ட்விட்டரில் ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். நடப்பாண்டின் ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதன்படி இதுவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றியும், 3 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. பெங்களூரு அணியில் இடம் பெற்றுள்ள […]

You May Like