நாட்டில் மின்சார வாகனங்களுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. ஓலா முதல் ஒகினாவா வரை எலக்ட்ரிக் பைக்குளை மக்கள் அதிகாமாக வாங்குகின்றனர். இது தவிர, பல எலக்ட்ரிக் பைக்குகளும் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால் ஸ்பிளெண்டர், ராயல் என்ஃபீல்டு புல்லட் போன்ற பைக்குகளின் எலெக்ட்ரிக் அவதாரத்திற்காக வாடிக்கையாளர்கள் காத்திருக்கின்றனர்.
பீகாரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று இந்த பிரபலமான பைக்குகளின் எலக்ட்ரிக் வெர்ஷன்களை தயாரித்து அதன் இணையதளத்தில் விற்பனை செய்து வருகிறது. இந்த இணையதளத்தில் மின்சார பைக்குகள், ஸ்கூட்டர்கள் என பல பாதிப்புகள் உள்ளன. இங்கே நீங்கள் ராயல் என்ஃபீல்டு புல்லட்டை மின்சார பதிப்பிலும் வாங்கலாம்.

சில்வலைன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்நிறுவனம் ராயல் என்ஃபீல்டு புல்லட்டைப் போன்ற எலக்ட்ரிக் பைக்கை விற்பனை செய்கிறது. இதற்கு லவ் பிளஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. வெறும் ரூ.2000 கொடுத்து பைக்கை புக் செய்துவிடலாம் என்பது சிறப்பு. மேலும் இந்த எலக்ட்ரிக் பைக், 72V/48AH பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.
இந்த எலக்ட்ரிக் பைக்கின் அதிகபட்ச வேகம் மணிக்கு 120 கிலோமீட்டர்ஆகும். முழுமையாக சார்ஜ் செய்தால் 150 கிமீ வரை இயக்க முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 4 மணிநேரம் ஆகும். லவ் பிளஸ் எலக்ட்ரிக் பைக் முன்பதிவு: பைக்கை வெறும் ரூ.2000க்கு பதிவு செய்யலாம்.இந்த லவ் பிளஸ் எலக்ட்ரிக் பைக்கின் விலை ரூ.1,51,999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.