fbpx

20,000 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு …..

நாட்டின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள 20,000 பணியிடங்களுக்கு ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை எழுத்துத் தேர்வு அறிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

20,000 காலியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தோராயமாக கூறப்படும் இந்த விவரம் விரைவில் துல்லிய எண்ணிக்கை விவரங்களை அறிவிக்கப்படும்.

சம்பள ஏற்ற நில 7 , 6 ( இளநிலை புள்ளியியல் அதிகாரி தவிர ) பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது 1.1.2022 அன்று 30க்கு கீழ் இருக்க வேண்டும்.

சம்பள ஏற்ற நிலை 5, 4 பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது 1.1.2022 அன்று 27 க்கு கீழ் இருக்க வேண்டும். எனினும் , இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி தளர்வுகள் அளிக்கப்படும் என்றும் அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதரபிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதி உடையவராவார்.

கல்வித் தகுதி

Assistant Audit Officer/Assistant Accounts Officer பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட இளம்நிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விரும்பத்தக்கவை: பட்டய கணக்காளர்.

இளநிலை புள்ளியியல் அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், அங்கீகரிப்பட்ட இளநிலை பட்டம் அல்லது புள்ளியியல் படிப்பு கொண்ட பாடநெறியில் பட்டம் பெற்றிக்க வேண்டும்.

ஏனைய பதவிகளுக்கு, அங்கீகரிக்கப்பட்ட பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

முக்கியமான நாட்கள்:

அறிவிப்பு நாள்: 17.09.2022

இணைய வழியில் விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள்:  08-10-2022

08-10-2022 அன்றிரவுக்குள்ளே விண்ணப்பக் கட்டணம் செலுத்தியிருக்க வேண்டும்.

இணையவழி விண்ணப்பத்தை திருத்தம் செய்வதற்கான காலம்: 12-10-2022 முதல் 13-10-2022

முதல்நிலை எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 2022, டிசம்பர் மாதம்

இரண்டாம் நிலை எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: பின்னர் அறிவிக்கப்படும்

விண்ணப்பக் கட்டணம்:  இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.100 ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட எழுத்துத் தேர்வு, இரண்டாம் கட்ட எழுத்துத் தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி தகுதிப் பட்டியல் தயாரிக்கப்படும்

Next Post

சாமானியன் திரைப்படத்தின் டீசர் வெளியீடு … கூடுதல் சம்பளம் கேட்ட நடிகர் ராதாரவி ….

Mon Sep 19 , 2022
சாமானியன் திரைப்படத்தில் நடித்ததற்காக சம்பளம் கூடுதலாக வழங்க வேண்டும் என்று டீசர் வெளியீட்டின்போது நடிகர் ராதாரவி பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. சாமானியன் திரைப்படத்தில் நடிகர் ராமராஜன், நடிகர் ராதாரவி ஆகியோர் நடிப்பில் ராஹேஷ் இயக்கத்தில் திரைப்படம் வெளியாக உள்ளது. படத்தின் டிரைலர் காட்சிகள் இன்று மாலை சென்னை டி.நகரில் வெளியிடப்பட்டது. இந்த படத்தின் டிரைலர் விழாவில் பேசிய நடிகர் ராதாரவி , ’’ நான் சாமானியன் படத்தில் நடிக்க குறைவான […]

You May Like