fbpx

2023 ஐபிஎல்!… சீசன் முழுவதும் பென் ஸ்டோக்ஸ் பவுலிங் செய்யமாட்டார்!… மைக் ஹஸ்ஸி அதிர்ச்சி தகவல்!…

இடது கால் முட்டியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக, 2023 ஐபிஎல் சீசன் முழுவதும் பென் ஸ்டோக்ஸ் பவுலிங் செய்யமாட்டார் என்றும் பேட்ஸ்மேனாக மட்டுமே அவரை பயன்படுத்த போவதாகவும் சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி கூறியுள்ளார்.

ஐபிஎல் 16-ஆவது சீசனின் முதல் போட்டி வரும் 31-ஆம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் தொடக்க விழா வரும் 31ம் தேதி அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து இந்த சீசனின் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது. ஐபிஎல் போட்டி இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில், இதற்கான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துவிட்டது.

ஐபிஎஸ் தொடரில் பங்கேற்கும் 10 அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்தவகையில், முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்ளும் சென்னை அணி, சொந்த மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. சென்னை அணியின் முக்கிய வீரர்களான தோனி, ஜடேஜா, ருத்ராஜ், பென் ஸ்டோக்ஸ், ராயுடு மற்றும் இளம் வீரர்கள் உள்ளிட்ட அனைவரும் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சீசனில் சிஎஸ்கே அணியை வலுப்படுத்தும் விதமாக, இங்கிலாந்து ஆல்ரவுண்டரும் மிகப்பெரிய மேட்ச் வின்னருமான பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடி என்ற பெரிய தொகை கொடுத்து சிஎஸ்கே அணி வாங்கியது. ஸ்டோக்ஸ் ஒரு ஆல்ரவுண்டராக அணியின் பேலன்ஸுக்கு வலுசேர்ப்பார் என்ற எதிர்பார்ப்பில் தான் அவருக்கு பெரிய தொகை கொடுக்கப்பட்டது. ஆனால் முழங்கால் காயம் காரணமாக அவர் இந்த சீசன் முழுவதும் பவுலிங் செய்யமாட்டார் என்றும் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே ஆடுவார் என்று சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி தெரிவித்துள்ளார்.

Kokila

Next Post

சிஎஸ்கேவின் பயிற்சி ஆட்டம்!... மாஸ் என்ட்ரி கொடுத்த தல தோனி!.. அரங்கம் அதிர வரவேற்ற ரசிகர்கள்!

Wed Mar 29 , 2023
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சிஎஸ்கே அணியின் பயிற்சி ஆட்டத்தின்போது, தல தோனி களமிறங்கியபோது, அரங்கம் அதிர ரசிகர்கள் வரவேற்பு கொடுத்தனர். ஐபிஎல் கிரிக்கெட்டின் 16 வது சீசன் வரும் மார்ச் 31 ஆம் தேதி தொடங்குகிறது. நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணி வீரர்களும் தங்களது அணியில் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி உட்பட சென்னை […]

You May Like