fbpx

2023 வேதியியலுக்கான நோபல் பரிசு!… குவாண்டம் புள்ளிகள் கண்டுபிடித்த 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு!

குவாண்டம் புள்ளிகள் கண்டுபிடிப்பு மற்றும் தொகுப்பு குறித்த ஆய்வுக்காக வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மவுங்கி பவேண்டி, அமெரிக்காவை சேர்ந்த லூயி புருஸ், ரஷ்யாவை அலெக்செய் எகிமோவு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரத்தில் அந்தந்த துறைகளில் உலக அளவில் சிறந்து விளங்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் நேற்று 2023ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மவுங்கி பவேண்டி, அமெரிக்காவை சேர்ந்த லூயி புருஸ், ரஷ்யாவை அலெக்செய் எகிமோவு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. குவாண்டம் புள்ளிகள் கண்டுபிடிப்பு மற்றும் தொகுப்பு குறித்த ஆய்வுக்காக இந்த பரிசு வழங்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மருத்துவத்திற்கான நோபல் பரிசுக்கு, கொரோனா வைரசுக்கு எதிராக எம்ஆர்என்ஏ தடுப்பூசிகளை உருவாக்கும் கண்டுபிடிப்புக்காக ஹங்கேரிய அமெரிக்கர் கேட்டலின் கரிக்கோ மற்றும் அமெரிக்காவின் ட்ரூ வெய்ஸ்மேன் இருவருக்கும் அறிவிக்கப்பட்டது. தைத் தொடர்ந்து, நேற்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்வீடனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பியர் அகோஸ்டினி, பெரென்ங்க் கிராஸ் மற்றும் அன்னி எல் ஹியூல்லியர் மூவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அணுக்களில் நகரும் போதும், ஆற்றலாக மாறும் போதும் எலக்ட்ரான்களின் இயக்கத்தை, அட்டோசெகண்ட் எனும் மிகமிக குறைவான நேரத்தில் கண்டறியும் ஆய்வுக்காக இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

தமிழக மக்களுக்கு கேஸ் சிலிண்டர்களுக்கு ரூ.100 மானியம் அறிவித்த திமுக...! எப்பொழுது வழங்கப்படும்...?

Thu Oct 5 , 2023
மத்திய அரசு கேஸ் சிலிண்டர்களுக்கு 100 ரூபாய் மானியம் உயர்த்திய நிலையில், திமுக தேர்தல் அறிக்கையில் 100 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று அறிவித்தது எப்பொழுது நிறைவேற்றப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தில், பொருளாதாரத்தில் பிந்தங்கிய பெண்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியம் கடந்த மாதம் ரூ.200 அதிகரிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை […]

You May Like