2023 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் ஜிம்பாப்வே அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஸ்காட்லாந்து அணி தகுதிப்பெற்றுள்ளது.
உலகக் கோப்பை போட்டியில் இருந்து மேற்கிந்திய தீவுகள் வெளியேறியதால், இலங்கை, ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய 4 அணிகளின் கடுமையான போட்டியின் தொடக்கத்தில் இலங்கை தேர்வானது. தற்போது ஜிம்பாப்வே அணி ஸ்காட்லாந்திடம் தோல்வியடைந்து உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து 234/8 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மைக்கேல் லீஸ்க் 48 ரன்களும், மேத்யூ கிராஸ் 38 ரன்களும், பிராண்டன் மெக்கல்லன் 34 ரன்களும் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய ஜிம்பாப்வே 41.1 ஓவரில் 203 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் ஸ்காட்லாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் ரியான் பர்லேவின் 83 ரன் வீணானது. சிக்கந்தர் ராசா 34 ரன்களும், வெஸ்லி 40 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றினர். ஸ்காட்லாந்து அணியில் அதிகபட்சமாக கிறிஸ் சோல் 3 விக்கெட்டுகளும், பிராண்டன் மெக்கல்லன் மற்றும் மைக்கேல் லீஸ்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். தகுதிச் சுற்றில் சிறப்பாக விளையாடிய ஜிம்பாப்வே, சூப்பர் சிக்ஸரில் இலங்கை மற்றும் ஸ்காட்லாந்து அணிகளிடம் தோல்வியடைந்து, உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது.2018 உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இப்போது 2023 உலகக் கோப்பை தகுதிச் சுற்று தொடரை 31 ரன்கள் வித்தியாசத்தில் இழந்ததால் ஜிம்பாப்வே ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.