fbpx

Election: விரைவில் தேர்தல்… நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களில் இன்று முதல் மார்ச் 6-ம் தேதி வரை…! மத்திய அரசு அறிவிப்பு

தேர்தல்களில் இளைஞர்கள் பங்கேற்பை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் 2024 இன்று முதல் மார்ச் 6 வரை “நாட்டுக்கான எனது முதல் வாக்கு” பிரச்சாரத்திற்கு கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. நாட்டின் இளைஞர்கள் தங்கள் குரல்களை ஒலிக்கச் செய்ய வேண்டும் என்று மத்திய கல்வி, திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தினார்.

நமது இளைஞர்களும், முதல் முறை வாக்காளர்களும் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி விடுத்த அழைப்பை அவர் எடுத்துரைத்தார். இன்று முதல் மார்ச் 6 வரை நாட்டில் உள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் தங்கள் வளாகங்களில் விரிவான வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகளை நடத்தவும், நமது இளைஞர் சக்தியை ஊக்குவிக்கவும், வாக்களிப்பதன் மதிப்பை அவர்களுக்கு வலியுறுத்தவும், அதிக பிரதிநிதித்துவ ஜனநாயகத்திற்கான தேர்தல் செயல்முறைகளில் பங்கேற்கவும் அவர் அறிவுறுத்தியதாக தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள் இந்த முயற்சியில் பங்கேற்கும். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் , உயர் கல்வி நிறுவனங்களில் நியமிக்கப்பட்ட இடங்கள் அடையாளம் காணப்படும், அங்கு வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பு நடவடிக்கைகள் அந்தந்த நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும். Mygov தளத்தில் கள நேரடிப் போட்டிகள் மற்றும் ஆன்லைன் போட்டிகள் நடைபெறும்.

English Summary: 2024 in higher educational institutions from today to March 6 for the “My First Vote for the Country” campaign

Vignesh

Next Post

Chennai HighCourt: அமைச்சர் தங்கம் தென்னரசு மீது சொத்து குவிப்பு வழக்கு...! இன்று முதல் விசாரணை..! நீதிபதி அதிரடி

Wed Feb 28 , 2024
சொத்து குவிப்பு வழக்குகளில் முன்னாள் இந்நாள் அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். அமைச்சர்கள்தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் இந்தப் பட்டியலில் உள்ளனர். இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிரான […]

You May Like