2024 ஜோதிட சாஸ்திரப்படி 2024ல் முக்கியமான கிரகங்கள் பெயர்ச்சி அடையும். இதன் மூலம் 4 ராசிக்காரர்கள் லட்சுமி தேவியின் அருளால் செல்வச் செழிப்பைப் பெறுவார்கள்.
2024 ஆம் ஆண்டில், மகிழ்ச்சியையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் தரும் வகையில் குரு பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த ஆண்டு சனி பகவான் கும்ப ராசியிலும், குரு பகவான் ஆண்டின் முதல் பாதியில் மேஷ ராசியிலும், பின்னர் ரிஷப ராசிக்கு மாற உள்ளார். ராகு மீனத்திலும், கேது கன்னி ராசியிலும் சஞ்சரிக்க உள்ளார். இது தவிர சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் பல சுப, அசுப யோகங்களை உருவாக்கும். இந்த கிரகப் பெயர்ச்சி அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கும். 2024 ஆம் ஆண்டின் வருடாந்திர கணிப்பின்படி, நான்கு ராசிக்காரர்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருக்கப் போகிறார்கள், ஏனெனில் இந்த ராசிக்காரர்கள் வரும் 2024 ஆம் ஆண்டு முதல் செல்வம், ஆடம்பரம், புகழ் மற்றும் முன்னேற்றம் பெறுவார்கள். எனவே 2024 ஆம் ஆண்டில் அதிர்ஷ்டம் பெறப்போக்கும் அந்த ராசிகள் எவை என்று தெரிந்து கொள்வோம்.
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த புத்தாண்டு மிகவும் சிறப்பாக அமையப் போகிறது. மேஷ ராசிக்காரர்கள் 2024 ஆம் ஆண்டில் லட்சுமி தேவியின் அருளால் செல்வம் பெறுவார்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அடுத்த வருடம் வெளிநாடு செல்லும் வாய்ப்பும் கிடைக்கலாம். 2024 ஆம் ஆண்டின் மத்தியில் உங்கள் ஆசை அனைத்தும் நிறைவேறும். காதலைப் பற்றி பேசுகையில், 2024 ஆம் ஆண்டில் ஒரு புதிய நபர் உங்கள் வாழ்க்கையில் நுழையலாம். குடும்பத்தில் சுபிட்சம் இருக்கும்.
ரிஷப ராசியினருக்கு இந்த புத்தாண்டு சாதனை பலன்கள் கிடைக்கும். இந்த நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் செய்து முடிக்க முடியும். தொழில், வியாபாரம் விரிவாக்குதல், புதுப்பித்தல் மற்றும் நவீன மயமாக்குதல் போன்ற விஷயங்களுக்கு செலவுகள் மேற்கொள்வீர்கள். மற்றவர்களிடமிருந்து வர வேண்டிய பணம் திரும்ப வந்து சேரும். சில விரயங்களைச் சந்திக்க நேரிடும். இந்த ஆண்டில் உங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். கல்வி மற்றும் தொழில் சார்ந்த விஷயங்களில் சில போராட்டமான சூழலும், அலைச்சல் ஏற்படும்.
மிதுன ராசிக்கு இந்த வருடம் ஏற்றத்தாழ்வுகளைச் சந்திக்க வேண்டியதற்கும். கல்வியில் விரும்பிய படிப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. தொழிலில் பெரிய அளவுக்கு முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் மனக்கசப்பு ஏற்படும். வெளியூர் சார்ந்த தொழில் வியாபாரத்தில் தடைகள் ஏற்பட்டு உள்ளது. கடன் பிரச்சனை ஓரளவுக்கு தீரும். உத்தியோகஸ்தர்களுக்கு இடம் மாற்றம் மற்றும் பதவி உயர்வு முன்னிட்டு விஷயங்களில் இருந்த பிரச்சனைகள் தீரும். உடல் வலி, கழுத்து, தோள்பட்டை மற்றும் மூளை தொடர்பான பிரச்சனைகள், தூசி, புகை ஒவ்வாமை ஏற்படும். அதனால் இது போன்ற விஷயங்கள் கவனம் தேவை.. காதல் விஷயங்களில் கவனமாக இருக்கவும்.
கடக ராசியினருக்கு இந்த ஆண்டு ஆசிர்வாதங்கள் கிடைக்கக்கூடியதாக இருக்கும். என்றாலும், உங்களுக்கு அறிவு சார்ந்த விஷயங்களில் மேன்மையும், வியாபாரத்தில் லாபமும் கிடைக்கும். பங்கு சந்தை விஷயத்தில் நல்ல லாபத்தை சம்பாதிக்க முடியும். எந்த ஒரு பணம் முதலீடு செய்வதிலும் கூடுதல் கவனமும், எச்சரிக்கையும் தேவை. வணிகம் சம்பந்தமான விஷயங்களில் வெற்றி கிடைக்கும். புதிதாக நிலம், கடைகள் வாங்க வாய்ப்புள்ளது. வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். பண வரவுக்கான ஆதாயங்கள் மேம்படும். உயர்கல்வியில் இருந்த தடைகள் நீங்கும்.
சிம்ம ராசினருக்கு இந்த ஆண்டு சிறப்பான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். புதிய முயற்சிகள் தொடங்கலாம். அரசியல் ஆதாயங்கள் உண்டு. சமூகத்தில் சிறப்பு மரியாதை கிடைக்க வாய்ப்பு உள்ளது. கூட்டாக செய்யக்கூடிய எந்த ஒரு வேலையிலும் நல்லிணக்கத்தைப் பேணுவோம். வேலை தொடர்பாக இடமாற்றம் விரும்பியவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். உத்தியகத்தில் வேலையை சரியான நேரத்தில் முடிக்க முடியும். பங்குச்சந்தை விஷயங்களில் லாபமும், பணியிடத்தில் பதவி உயர்வும் உண்டாகும். கல்வியும் மற்றும் தொழில் துறையில் சில தடைகள் இருக்கும். சிலருக்கு எலும்பு சார்ந்த பிரச்சினை, காயங்கள், தூசி, வெயில் போன்ற விஷயங்களால் உடல் பிரச்சினை ஏற்படும்.
துலாம் ராசிக்காரர்களுக்கு வரும் 2024 ஆம் ஆண்டு சிறப்பானதாக அமையும். துலாம் ராசிக்காரர்களுக்கு தொழிலில் பொன்னான வாய்ப்புகள் கிடைக்கும். முழுமையடையாத வேலையை முடித்து நிம்மதி அடைவீர்கள். வேலையில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் வருமானம் அதிகரிக்கும். அன்னை லக்ட்சுமியின் அருளால் செல்வம் பெருகும். குடும்ப உறவுகள் வலுவடையும். வெளியூர் சென்று படிக்க விரும்பும் மாணவர்களின் விருப்பம் நிறைவேறும். 2024 ஆம் ஆண்டு உங்கள் வாழ்க்கையில் புதிய திருப்பங்களைக் கொண்டுவரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
கன்னி ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டு இனிமையாக இருக்கும். அபரிமிதமான செல்வத்துடன், மகிழ்ச்சியும் இந்த ராசி மக்களின் வாழ்க்கையில் நுழையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புகள் அதிகம். வியாபாரத்திற்கும் நல்ல நேரம். எல்லா துறைகளிலும் வெற்றி பெறுவீர்கள். தனியாக இருப்பவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். உங்களின் கடின உழைப்பின் பலன் நிச்சயம் கிடைக்கும். மகர ராசிக்காரர்கள் 2023 ஆம் ஆண்டில் தங்கள் அன்பைக் கண்டுபிடிப்பதில் வெற்றி பெறுவார்கள். இந்த வருடம் உங்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2024ஆம் ஆண்டு சில நல்ல செய்திகளைத் தரலாம். நீண்ட நாட்களாக வேலையை மாற்ற நினைத்தவர்களுக்கு வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். அன்னை லட்சுமி உங்களுக்கு ஆண்டு முழுவதும் கருணை காட்டுவார். வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டே இருப்பீர்கள். 2024 ஆம் ஆண்டில், காதல் மற்றும் வாழ்க்கையில் நீங்கள் விரும்பும் நபரை நீங்கள் திருமணம் செய்துக் கொள்வீர்கள்.
தனுசு ராசி நேயர்களுக்கு இந்த புத்தாண்டு பல தடைகளை தாண்டி வெற்றி அடைய வேண்டி இருக்கும். உங்கள் வேலைகளை சரியாக திட்டமிட்டு செய்ய குறித்த நேரத்தில் முடிக்க முடியும். வணிகர்கள் லாபங்கள் பெற முடிந்தாலும், செலவுகளை கவனித்து செய்யவும். உத்தியோகத்தில் பணியிட மாற்றம் விருப்பத்திற்கு எதிரானதாக இருக்கலாம். தொழில் துறையில் புதிய விஷயங்களை செய்ய ஆசைப்படுவீர்கள்.
படிக்கக்கூடிய மாணவர்களுக்கு நல்ல வெற்றிகள் கிடைக்கும். கவனமாக படிக்கவும்.
இந்த ஆண்டு நீங்கள் நினைத்தபடி சுப காரியங்கள் நடக்கும்.
மகர ராசி எனக்கு இந்த முன்னேற்றம் நிறைந்ததாக இருக்கும். தொழில், வியாபாரம் சார்ந்த விஷயங்களில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர்களுக்கு அதற்கான பண வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த முடியும். உத்தியோகத்தில் இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. பிள்ளைகளின் முன்னேற்றம் மற்றும் சுப காரியங்கள் நிறைவேறும்.
இந்த ஆண்டு வண்டி வாகன ஓட்டுவதில் கவனம் தேவை. காயங்கள், வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள், சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எச்சரிக்கை தேவை.
கும்ப ராசியினருக்கு ஏழரை சனியில் ஜென்ம சனி நடப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக செயல்படுவது நல்லது. இருக்கக்கூடிய உத்தியோகத்தை தக்க வைத்துக் கொள்ளவும். உங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதும், சோம்பேறித்தனத்தை விடுத்து புத்துணர்ச்சியுடன் செயல்படுவதால் வேலையில் முன்னேற்றத்தை சந்திக்க முடியும். புதிய முயற்சிகள் சில தடைகள் ஏற்படலாம். கல்வித்துறையில் நல்ல முன்னேற்றத்தை பெறலாம். உங்களின் உணவு பழக்க வழக்கத்தில் கவனம் தேவை.
மீன ராசியினருக்கு இந்த வருடம் எல்லாத்துறையிலும் வெற்றியைத் தரும். வியாபாரம் விரிவடையும். கூட்டு முயற்சியால் வெற்றி கிடைக்கும்.அரசியலில் பெரிய சாதனை படைக்க முடியும். தொழில் நிபுணர்களின் ஆலோசனையுடன் செய்யக்கூடிய எந்த ஒரு தொழிலும் மேன்மை பெறும். புதிய வீடு, மனை வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்த விஷயத்தில் தெரியாத நபரை நம்ப வேண்டாம். உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் விரும்பிய இடத்திற்கு மாறுதலும் கிடைக்க வாய்ப்புள்ளது. கல்வி மற்றும் தொழில் சார்ந்த துறையில் நல்ல வெற்றியை பெற்றிட முடியும்.