fbpx

2024 பாரிஸ் ஒலிம்பிக்!. காலிறுதி சுற்றுக்கு நேரடி தகுதி!. இந்திய ஆண்கள் வில்வித்தை அணி அபாரம்!.

2024 Paris Olympics: பாரிஸ் ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்திய ஆண்கள் அணி நேரடியாக காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக்கில் வில்வித்தை போட்டிக்கான முதன்மை சுற்றுகள் ஜூலை 30-ம் தேதி தொடங்குகின்றன. இதனை முன்னிட்டு தரவரிசை பெறுவதற்கான சுற்று நேற்று(ஜூலை 25) நடைபெற்றது. அதன்படி பெண்களுக்கான போட்டியில் இந்திய வீராங்கனைகள் 4-வது இடத்தை பிடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.

இந்நிலையில் ஆண்களுக்கான போட்டியில் இந்தியாவின் திராஜ் பொம்மாதேவரா, தருண் தீப் ராய், பிரவீன் ரமேஷ் ஜாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர். திராஜ் பொம்மாதேவரா 681 புள்ளிகளும், தருண்தீப் ராய் 674 புள்ளிகளும், பிரவீன் ரமேஷ் ஜாதவ் 658 புள்ளிகளும் பெற்றனர். மொத்தமாக 2013 புள்ளிகள் பெற்று இந்திய அணியினர் 3-வது இடம் பிடித்தனர். இதனால் ஆண்கள் அணி காலிறுதிக்கு நேரடியாக தகுதி பெற்றது. தென்கொரியா 2049 புள்ளிகளுடன் முதலிடத்தையும், பிரான்ஸ் 2025 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும் பிடித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore: உங்கள் துணையுடன் இப்படி செக்ஸ் வெச்சு பாருங்க..!! உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா..?

English Summary

Indian men’s archery team secures direct quarter-final qualification at Paris Olympics 2024

Kokila

Next Post

தூள்..! பெண்களுக்கு வழங்கப்படும் கர்ப்ப பதிவு... இனி ஆன்லைன் மூலம் நீங்களே பதிவு செய்யலாம்...!

Fri Jul 26 , 2024
Pregnancy registration for women... Now you can register yourself online

You May Like