fbpx

2024 சனிப்பெயர்ச்சி: இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு தான் கொண்டாட்டம்.!

வருகின்ற புத்தாண்டில் பல ராஜ யோகங்கள் நடைபெற இருக்கின்றன. சனிபகவானின் இடப்பெயர்ச்சி மற்றும் குரு இடப்பெயர்ச்சி ஆகியவை 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பல மாற்றங்களை கொண்டு வரப் போகிறது. வர இருக்கின்ற 2024 ஆம் ஆண்டில் சனிபகவானின் இடப்பெயர்ச்சியால் திரிலோக ராஜயோகம் நடைபெற உள்ளது. இந்த ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் அடிக்க போகும் மூன்று ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

சனி மற்றும் குருவின் இடப்பெயர்ச்சி 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பல மாற்றங்களை கொண்டு வருகிறது. வருகின்ற புத்தாண்டில் நடைபெற இருக்கும் சனி பெயர்ச்சியால் சிம்மம் கும்பம் மற்றும் விருச்சக ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நடைபெற இருக்கும் அதிர்ஷ்டங்களை காணலாம். திரிலோக ராஜயோகத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் அடிக்க இருக்கிறது. சனிபகவானின் பெயர்ச்சியால் அவர்களது வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சம்பள உயர்வு மற்றும் தொழில் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. மேலும் திருமண வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

இந்த ராஜ யோகம் கும்ப ராசிக்காரர்களுக்கும் பல அதிர்ஷ்டங்களை கொண்டிருக்கிறது. அவர்களுக்கு தொழில் வெற்றி மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு விரைவாக திருமணம் நடைபெறும். மேலும் பொருளாதார ரீதியாகவும் நல்ல முன்னேற்றங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. திரிலோக ராஜயோகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கும் ராஜயோகத்தை கொண்டு வருகிறது. இவர்களுக்கு சொத்து மற்றும் வீடு வாங்கும் வாய்ப்புகள் கூடிவரும். தொழிலிலும் வெற்றி கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு தேடி வரும். சில்லரை வியாபாரம் மற்றும் மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

Next Post

இது மட்டும் தெரிஞ்சா போதும், இனி எலுமிச்சை பழ தோலை குப்பையில போட மாட்டீங்க.!.!

Wed Dec 27 , 2023
எலுமிச்சை பழம் உடலுக்கு தேவையான பல சத்துக்களை உள்ளடக்கியிருக்கிறது. இவற்றில் சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி ஆகியவை நிறைந்து இருக்கின்றன. நாம் அனைவரும் எலுமிச்சை சாறை எடுத்த பின் அதன் தோலை தூக்கி வீசி விடுவோம். ஆனால் எலுமிச்சையின் தோலில் நமது உடலுக்கு நன்மை தரக்கூடிய பல சத்துக்கள் அதிக அளவில் இருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த எலுமிச்சை தோலை வேக வைத்த நீரை குடிப்பதன் […]

You May Like