ஐபிஎல் 2025 மெகா ஏலத்தின் முதல் நாள் மிகவும் உற்சாகமாக இருந்தது. ஏலத்தின் முதல் நாளில் மொத்தம் 72 வீரர்கள் விற்கப்பட்டனர். அதன்படி 10 அணிகளும் மொத்தம் ரூ.467.95 கோடி செலவிட்டுள்ளன. அதிக விலை கொண்ட இந்தியராக ரிஷப் பண்ட் மற்றும் அதிக விலை கொண்ட வெளிநாட்டவர் ஜோஸ் பட்லர் ஆகியோர் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். 27 கோடிக்கு ரிஷப் பண்ட் லக்னோ அணியால் வாங்கப்பட்டார். பட்லரை ரூ.15.75 கோடிக்கு குஜராத் எடுத்தது.
IPL 2025 மெகா ஏலத்தில் அதிக விலைக்கு விற்ற வீரர்கள்: ரிஷப் பந்த் – ரூ 27 கோடி – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ஷ்ரேயாஸ் ஐயர் – ரூ 26.75 கோடி – பஞ்சாப் கிங்ஸ், வெங்கடேஷ் ஐயர் – ரூ 23.75 கோடி – கொல்கத்தா நைட் ரைடர்ஸ், யுஸ்வேந்திர சாஹல் – ரூ 18 கோடி – பஞ்சாப் கிங்ஸ், அர்ஷ்தீப் சிங் – ரூ 18 கோடி – பஞ்சாப் கிங்ஸ், ஜோஸ்ட் பட்லர் ரூ 15.75 கோடி – குஜராத் டைட்டன்ஸ், கேஎல் ராகுல் – ரூ 14 கோடி – டெல்லி கேபிடல்ஸ், டிரென்ட் போல்ட் – ரூ 12.50 கோடி – மும்பை இந்தியன்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் – ரூ 12.50 கோடி – ஆர்சிபி, முகமது சிராஜ் – ரூ 12.25 கோடி – குஜராத் டைட்டன்ஸ், மிட்செல் ஸ்டார்க் – ரூ 11.75 கோடி – டெல்லி கேபிடல்ஸ், ஃபில் சால்ட் – ரூ 11.50 கோடி – ஆர்சிபி, ஜிதேஷ் ஷர்மா – ரூ 11 கோடி – ஆர்சிபி, ரவிச்சந்திரன் அஸ்வின் – ரூ 9.75 கோடி – சென்னை சூப்பர் கிங்ஸ், நூர் அகமது- ரூ 10 கோடி- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
லியாம் லிவிங்ஸ்டோன்- ரூ 8.75 கோடி- ஆர்சிபி, ஜோஃப்ரா ஆர்ச்சர்- ரூ 12.50 கோடி- ராஜஸ்தான் ராயல்ஸ், இஷான் கிஷன்- ரூ.11.25 கோடி – சன்ரைசர்ஸ் ஹைதராபாத், முகமது ஷமி – ரூ.10 கோடி – சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ஹர்ஷல் படேல் – ரூ.8 கோடி – சன்ரைசர்ஸ் ஹைதராபாத், அவேஷ் கான் – ரூ.9.75 கோடி – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், டேவிட் மில்லர் – ரூ.7.50 கோடி – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ககிசோ ரபாடா – ரூ 10.75 கோடி – குஜராத் டைட்டன்ஸ், பிரசித் கிருஷ்ணா – ரூ.9.50 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் ஏலம் எடுத்துள்ளது.
Readmore: புற்று நோய் வராமல் தடுக்க முடியுமா? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..