fbpx

ரூ.20,55,000 கடன் வழங்கும் மத்திய அரசு..? உங்களுக்கும் இந்த மெசேஜ் வந்துருக்கா..? மக்களே அலெர்ட்..!! உண்மை இதுதான்..!!

“பிரதம மந்திரி முத்ரா யோஜனா” திட்டத்தின் கீழ் ரூ.20,55,000 கடன் வழங்குவதாக சமூக வலைதளங்களில் செய்தி ஒன்று வைரலாகி வருகிறது.

”பிரதம மந்திரி முத்ரா யோஜனா 2023” திட்டன் கீழ் ரூ.20,55,000 கடன் வழங்க தயாராக இருப்பதாகவும், குடிமக்கள் தங்களின் செல்போன் எண்களைச் சரிபார்த்து, சில நிமிடங்களில் கடன் தகுதியைச் சரிபார்க்க வேண்டுமெனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது வைரலாகி வரும் இந்த செய்தி போலியானது என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த செய்தி போலியானது என்றும், இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் PIB கேட்டுக் கொண்டுள்ளது.
“உங்கள் வங்கி/தனிப்பட்ட விவரங்களைப் பகிருமாறு கேட்கும் மின்னஞ்சல்கள்/எஸ்எம்எஸ்களுக்குப் பதிலளிக்க வேண்டாம்” என்று PIB எச்சரிக்கை விடுத்துள்ளது.

Chella

Next Post

கஞ்சா போதையில் வந்த இளைஞர்….! இறுதியில் மூதாட்டிக்கு ஏற்பட்ட விபரீதம்….!

Tue Jun 13 , 2023
மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த் புறம் ஜீவா நகர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் அர்ஜுனன்(30). இவர் மீது திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் இருக்கின்றன. இவருடைய அத்தையான 70 வயது மூதாட்டி ஒருவர் அந்த பகுதியில் தனியாக வசித்து வந்திருக்கிறார். அந்த மூதாட்டியின் வீடு காலை வெகு நேரம் ஆன பின்னரும் திறக்கப்படாமல் இருந்திருக்கிறது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவருடைய வீட்டிற்கு சென்று பார்த்தனர். […]

You May Like