தந்தை பெரியாரின் பேரனும், சொல்லின் செல்வர் சம்பத்தின் அவர்களின் மகனும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ-வுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவுக் காரணமாக கடந்த மாதம் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி ஈவிகேஎஸ் இளங்கோவன் உயிரிழந்தார்.
ஈவிகேஎஸ் இளங்கோவனின் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் பிரபலங்கள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து மறைந்த ஈவிகேஎஸ். இளங்கோவன் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை நந்தம்பாக்கம் அருகே உள்ள மணப்பாக்கம் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சென்று மக்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களுடைய அஞ்சலியை செலுத்தினார்கள்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ.வுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை செய்ப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. முகலிவாக்கம் எல் அண்டு டி காலனியில் உள்ள மின்மயானத்தில் மாலை தகனம் செய்யப்படும் எனவும் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அரசு மரியாதையுடன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இறுதி சடங்கு நடைபெற்று அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது. சென்னை மணப்பாக்கம் இல்லத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, முகலிவாக்கம் மின் மயானத்தில் 48 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் தகனம் அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது.
Read more ; சற்றுமுன்.. விசிக-வில் இருந்து ஆதவ் அர்ஜூனா திடீர் விலகல்.. தவெக-வில் இணைகிறாரா?